Posts

Showing posts from February, 2024

சயின்டிஸ்ட்

Image
 சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். 'ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே' என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார்.எலிகளும்  பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, "இந்த ஆள் எப்படி?" அதற்கு பழைய எலி சொன்னது, "இவனா? ரொம்ப தத்தி, மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்.."

அன்பு என்றால் என்ன

Image
 அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை,  ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.  இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.  மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.  முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள். கேட்டபோது சொன்னாள்  நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்".   அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார். "அன்பு என்றால் இது தான்". நீதி: உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்... ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது

The Dog and His Shadow Moral Story in Tamil

  நாயும் அதன் நிழலும் முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது. செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், எலும்புத்துண்டை தறுமாறு' கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்". என்று கூறி விட்டுச்சென்றது. செல்லும் வழியில் பாலத்தை வேண்டியிருந்தது நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணிரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக லொள் லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணிரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது

தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்

  தூண்டில் மாட்டிய மீனும், தவளையும் ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி, தண்ணீருக்குள் விட்டிருக்கிறான்? என்றது. அட முட்டாளே! அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை. நன்றி கெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்று சொல்லிக்கொண்டு அந்த மீன் துடித்துக்கொண்டிருந்த புழுவை விழுங்கியது. பின் மீனும் துடித்துக்கொண்டே பரிதாபமாக ஏமாந்தேனே! என்றது. நன்றி கெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்று மீன் சொல்லியதையே சொல்லிக்காட்டியது தவளை.

பேராசை பெரு நஷ்டம்.

Image
   மீனவன் மீன்பிடிக்க தனது படகில் சென்றான். மீன் துண்டுகளை கடலில் போட்டான். சிறிதுநேரம் கழித்து. அந்த தூண்டிலில் ஒரு மீன் மாட்டியது. மாட்டிய மீனை படகில் எடுத்து வைத்தான். அப்போது அந்த மீன் மீனே உன்னை பார்த்து. மனிதனே ஏன் என்னை பிடித்தாய். என்று கேட்டது. நீ எப்படி பேசுற? நான் மந்திரமே. நீ எனக்கு விடுதலை தந்தாய். உனக்கு இரண்டு வரங்கள் தருகிறேன். வரம் என்ன வரம். நீ கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால். என்ன ஆனால்? ஒரு நாளைக்கு ஒரு வாரம் மட்டுமே கொடுக்க முடியும். பரவாயில்லை, என் வரத்தை நான் கேட்கிறேன். எனக்கு நிறைய காய்கறிகள் வேண்டும். என்று கேட்டான். மந்திர மீனு அவன் படகில் நிறைய காய்கறியை நிரப்பியது. பின்பு கடலுக்குள் சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்று கடலில் நடந்த அனைத்தையும் அவன் மனைவியிடம் சொன்னான். அதற்கு மனைவி. முட்டாளே! முட்டாளே! மந்திரம் என்கிட்ட யாராவது காய்கறி கேட்பாங்களா? வேற என்ன கேட்க வேண்டும்? என்றான் மீனவன்.அதற்கு மனைவி. மந்திரம் என்கிட்ட நிறைய தங்க முட்டையும் கேளுங்க. போதும் சொல்ற அளவுக்கு கேளுங்க. என்று மனைவி கூறினாள். மீனவன் கடலுக்குச் சென்றான். அந்த மீனும் கடலுக்கு ம...

சீடர்கள்‌ தெளிவு பெற்றனர்‌...

  குருகுலத்தில்‌ பாடம்‌ நடந்து கொண்டிருந்தது.  ஒரு சீடன்‌, “எதிர்ப்பு, வறுப்பு, துன்பம்‌, வறுமை, சபலம்‌, தோல்வி, கோபம்‌, சோம்பல்‌ இவை ஒரு மனிதனுக்கு வந்தால்‌ இதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?” என்று குருவிடம்‌ கேட்டான்‌... ' எதிர்ப்பு வந்தால்‌ அது உன்‌ துணிவுக்கு வந்த சோதனை. வெறுப்பு வந்தால்‌ அது உன்‌ பிடிப்புக்கு. வந்த சோதனை. துன்பம்‌ வந்தால்‌ அது உன்‌ திறமைக்கு வந்த சோதனை. வறுமை வந்தால்‌ அது உன்‌ நேர்மைக்கு வந்த சோதனை. சபலம்‌ வந்தால்‌ அது உன்‌ மன உறுதிக்கு வந்த சோதனை. தோல்வி. வந்தால்‌ அது உன்‌ வலிமைக்கு வந்த சோதனை. கோபம்‌ வந்தால்‌ அது உன்‌ பொறுமைக்கு வந்த சோதனை. சோம்பல்‌ வந்தால்‌ அது உன்‌ சுறுசுறுப்புக்கு வந்த சோதனை. மனிதர்களுள்‌ 'வற்றியாளன்‌. யார்‌?! என்று கேட்டால்‌, இது போன்ற வேகத்தடைகளை விவேகமென்னும்‌ விழிப்பு உணர்வினால்‌ களைந்து சாதனை படைப்பவன்‌ தான்‌!    என்றார்‌ குரு...   குருவின்‌ இந்த விளக்கத்தைக்‌ கேட்டு சீடர்கள்‌ தெளிவு பெற்றனர்‌... 

நீலகண்டன்

Image
                                                         நீலகண்டன் நீலகண்டன் ஒரு ஊரில் சிவன் கோயில் உள்ளது அதை வணங்க ஒரு சிவன் பக்தன் வந்தன்.‌‍.ஆனால் அவனை உள்ளே விட வில்லை கோயில் பூசாரி சிவ பத்தன்:  எனக்கு ஏன் உள்ளே அனுமதி இல்லை                                                    பூசாரி :  உன் உடை உன் உடம்பு எப்படி இருக்கு பாரு                                                  சிவ பத்தன்:  இதற்கு என் நல்லா தான் இருக்கு                                         ...

Neelakandan

Image
  Neelakandan  There is a Shiva temple in a town and a Shiva devotee came to worship it. But the temple priest did not let him inside. Shiva Pathan : Why am I not allowed inside Priest: Look at your dress and how sick you are Shiva Pathan: My goodness for this Priest: Shiva will come out if I allow you Shiva Pathan repented Priest 2: Why didn't they let him go and he would have gone to worship God Priest: You look at your work Shiva Pathan was walking and resting under a neem tree. Then they did not allow me to go inside the temple. Lord Shiva, are you there or not? Someone came and asked who you were, sir Shiva Pathan: I am a Shiva devotee. But he did not let me inside the temple   Why sir? Shiva Pathan: That's why clothes and body are dirty   Seeing themselves does not seem so sir Shiva Pathan: Something but could not worship Shiva  Shiva is also a stone and being here is a stone Shiva Pathan: Hey brother, don't say that wrong    There is nothing wro...

குணம்‌

  ஒரு காட்டில்‌ பறவை ஒன்று தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது.அந்த வழியே சிங்கம்‌,புலி,சிறுத்தை மற்றும்‌ நரிகள்‌ சென்றது. பின்பு ஆடு,மாடு எல்லாம்‌ சென்றது.இதை அனைத்தையும்‌ கவனித்துக்‌ கொண்டே பறவை தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியே மனிதன்‌ ஒருவன்‌ வந்தான்‌.பறவை உடனே பறந்து சென்றது. இது தினமும்‌ நடந்து கொண்டே இருந்தது. ஒரு நாள்‌ மனிதன்‌ பறவையிடம்‌ கேட்டான்‌ அனைத்து மிருகங்கள்‌ செல்லும்போது தானியங்களை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய்‌.என்னை பார்த்தவுடன்‌ ஏன்‌ பறந்து செல்கிறாய்‌ என்று. அதற்கு பறவை சிங்கம்‌,புலி,சிறுத்தை இவைகளின்‌ குணம்‌ கொள்வது நரியின்‌ குணம்‌ ஏமாற்றுவது மாடு, ஆடுகளின்‌ குணம்‌ முட்டுவது. அவைகள்‌ அவைகளின்‌ குணத்தில்‌ இருந்து மாறாது. ஆனால்‌, நீயோ மனிதன்‌. எப்போது எப்படி உன்‌ குணத்தை மாற்றுவாய்‌ என்பது தெரியாது. அதனால்‌ தான்‌ உன்னை பார்த்து பயந்து பறக்கிறேன்‌ என்றது! 

இரண்டு முட்டாள் ஆடுகள்

Image
  இரண்டு முட்டாள் ஆடுகள் அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன. அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன. முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின. ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன. நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

  வெட்டுக்கிளியும் ஆந்தையும் அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், "கொஞ்சம் பாடுவதை நிறுத்து" என்று கேட்டது. வெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, "நீ கண் தெரியாத குருட்டு பறவை! பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்" என்று திட்டியது. தினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டு வந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து. "நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர்களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன...

நன்றி மறந்த சிங்கம்

  நன்றி மறந்த சிங்கம் காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன். அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன். “மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது. மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது. “நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன். “மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று நைசாகப் பேசியது சிங்கம்...

தன்னம்பிக்கை மட்டுமே உழைப்பின் வெற்றி.

   ஒரு ஊர்ல ராமு சோமு அப்படின்னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ராமு கடனா வாங்கி அவன் தோட்டத்துல தர்பூசணி விதையை போட்டான். சோமு கடன வாங்கி. அவன் தோட்டத்துல அவனும் தர்பூசணி விதையை போட்டான். மறுநாள் இருவரும் சென்று தோட்டத்தை பார்த்தனர். ராமு. அடா. அடடா. அடடா. நல்லா தர்பூசணி வந்துருக்கு. சிறப்பு நம்ம கடன அடிச்சுட்டு. மீதி பணத்துல மறுபடியும் விதையை போட்டு காசு பாக்க வேண்டியது தான். அட என்னடா இது நம்ம தோட்டத்துல மட்டும் தர்பூசணி சின்னதா இருக்கு. என்று கூறினார். சோமு. ராம் கிட்ட கேட்டா. டேய் ராமு. என்னோட தோட்டத்துல தர்பூசணி எல்லாம் சின்னதா இருக்கே என்ன பண்றது எதோ ஐடியா இருந்தா கூடா. ராமு சொன்னான். நீ தண்ணீரை நல்லா விடுடா. பெரிய பலமா வரும்? சோமு உடனே நினைத்தான். பொறாமை பிடித்தவன் எத்தனாவது யோசனை தரான் பாரு. அது சரி. அவனை விட நம்ம பழம் பெரியதாக வந்துவிட்டார். அவனுக்கு வியாபாரம் கிடையாது அல்லவா? அதனால்தான் எந்த ஒரு யோசனையும் கூறவில்லை. பொறாமை பிடித்தவன். சிறிதுநேரம் கழித்து அந்த ஊரில் உள்ள ஒரு சாமியாரிடம் சென்றான். ஐயா எனக்கு தோட்டத்தில் நான் தர்பூசணி விதையை போட்டு இருக்கிறேன். ஆனால் எனத...

டரக்டர்

  ஒரு மனிதன்‌ டாக்டரைத்‌ தேடி வந்தான்‌. "டரக்டர்ஞ்‌ எனக்கு ஒரு பிரச்னை?" "என்ன பிரச்னை?” "நான்‌ செத்துப்‌ போயிட்டேன்‌!” டாக்டருக்குத்‌ தூக்கி வாரிப்‌: போட்டது. அவர்‌ புரிந்து கொண்டார்‌. இவனிடம்‌ நயமாகப்‌ பேசித்‌ தான்‌ சறி செய்ய: வேண்டும்‌ என்று முடிவு செய்து கொண்டார்‌. பேச அரம்பித்தார்‌. "இங்கே பாருப்பாஞ்‌ நான்‌ நாற்காலியில்‌ உட்கார்ந்திருக்கேன்ஞ்‌ நீ நாற்கரலில: உட்கார்ந்திருக்கே நானும்‌ நீயும்‌ பேசிக்‌ கொண்டிருக்கிறோம்‌ அதனாலே நீ சாகலேஞ்‌.” "இல்லே சார்‌ இப்ப நீங்க பேசிக்கிட்டிருக்கிறது என்னோட ஆவி. கிட்டேஞ்‌!” டாக்டருக்கு மேலும்‌ அதிர்ச்சிஞ்‌ ரொம்பவும்‌ வில்லங்கம்‌ பிடிச்ச ஆசாமியா இருக்கானேஞ்‌! மறுபடியும்‌ ஆரம்பித்தார்‌. "இங்கே பாருப்பாஞ்‌ செத்துப்‌ 'போனவங்களுக்கும்‌ உயிரோட இருக்கிறவங்களுக்கும்‌ வித்தியாசம்‌ இருக்குமா? இருக்காதா?” "இருக்கும்‌!" "என்ன வித்தியாசம்‌?” "ீங்க தானே டாக்டர்ஞ்‌ நீங்களே சொல்லுங்க!” இவனை அறிவியல்‌ பூர்வமாக திரூபித்துப்‌ புரிய வைக்கலாம்‌ என்று முடிவு எடுத்த டாக்டர்‌ மறுபடியும்‌ ஆரம்பித்தார்‌. "இதோ: ப...

நரியின் தந்திரம்

                       நரியின் தந்திரம் ஒரு பெரிய வனத்தில் வேட்டை ஆட வந்த ஒரு வேடன் மிருகங்களைப் பிடிப்பதற்காக ஒரு பொறியைத் தயாரித்து வைத்து விட்டு தனது வேட்டையை தொடரச் சென்றான். அப்போது வேடன் வைத்த பொறியை அறியாத ஒரு நரி தவறுதலாக அதில் சிக்கிக் கொண்டது. அந்த நரி தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், அந்த நரியின் வால் வசமாக அந்தப் பொறியில் சிக்கிக் கொண்டது. அந்த நரி, "உயிர் பெரிதா! இல்லை வால் பெரிதா!" என்று யோசித்தது. அதன் மனதில் உயிர் தான் பெரியது என்று தோன்றியது. அதனால் அது (நரி) தனது வாலை அறுத்துக் கொண்டு தப்பித்து ஓடியது. இதனால் வால் அருந்த அந்த நரி வேதனையும், வெட்கமும் அடைந்தது. அந்த நிலையிலேயே அது தனது சக நரிகள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றது. வால் அறுந்த நரியைப் பார்த்து மற்ற நரிகள் சிரித்தன. அதனைக் கண்ட வால் இழந்த நரி, "நண்பர்களே! இது தான் இன்றைய நவீன உலகின் நாகரிக பாணி (Fashion). எத்தனை காலம் தான் நாம் வால் உடனேயே அலைவது. எதிலும் ஒரு மாற்றம் வேண்டாமா? தவிர, இந்த வால் இருப்பதால் தான் நம்மை அனைவரும் மிருகம் என்று கூறி ஒத...

நண்பகல் தூக்கம்

                                                 நண்பகல் தூக்கம் ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான். அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான். சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார். நீதி : நாம் எப்படியோ நம் எண்ணங்களும் ...

சிவனின் வரம். முனிவரின் சாபம்

  சிவனின் வரம். முனிவரின் சாபம். ஒரு காட்டுல ஒரு முனிவர் சிவனை நோக்கி தவம் பண்ணிட்டு இருந்தாரு. அந்த தவத்தைக் கண்டு சிவபெருமான் அந்த முனிவரின் முன் தோன்றினார். முனிவரே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் நான் தருகிறேன். என்று சிவபெருமான் கூறினார். நான் பார்க்கின்றேன். அனைவரும் கல்லாக வேண்டும். அப்படி ஒரு வரம் வேண்டும். என்று முனிவர் கேட்டார். அதற்கு சிவபெருமான். உனக்கு அந்த வரத்தை தருகிறேன். என்று சொல்லி அந்த இடத்தை விட்டு மறைந்தார். அந்த வரத்தை பெற்ற முனிவர் காட்டில் உள்ள மானை பார்த்தார்மான் உடனே கல்லாகிவிட்டது. சிங்கத்தைப் பார்த்தார். சிங்கமும் கல்லாகி விட்டது. பிறகு யானையைப் பார்த்தா யானையும் கல்லாகிவிட்டது. சிறிது நேரம் யோசித்த முனிவர் மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். முனிவரும் மீண்டும் தோன்றினார் சிவபெருமான். சிவபெருமான் கேட்டார். இப்போது உனக்கு என்ன வேண்டும்? அதற்கு முனிவர் நான் யாரைப் பார்த்தாலும் அவர்கள் கல்லாகி விடுகிறார்கள். அதான் உன்னை பார்த்தால் நீ கூட கல்லாகி விடுவாயா என்று எண்ணினேன். இது எப்படி நான் கலாய்க்கிறேன். என்று கேட்டவாறு கல்லாகி விட்டான். அதற்கு சிவபெரு...

காக்காவும் குயிலும்

  காக்காவும்  கு யிலும் ரெண்டு பேரு லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் பார்க் பீச்னு சுத்திட்டு இருந்தாங்க. அவங்க ஜாலியா சுத்து சொன்னேன். கோயில் வீட்லயும் காக்கா வீட்லயோ அவங்க பேரன்ஸ் பாத்துட்டாங்க. அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. கோயிலோட அப்பா சொன்னாரு. ஏய் அவன் என்ன? நேரத்துல இருக்கான். நம்ப என்ன நிறத்தில் இருக்கும்? அவன கல்யாணம் பண்ணா நம்ம சாதி சொன்னா என்ன சொல்லணும். இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன். அப்படினு சொன்னாரு. உடனே உயிரோட அம்மா. என் அண்ணன் பையன் இருக்கான் அவன வர சொல்றேன் சீக்கிரம் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுலாம். சரி சரி வர சொல்லு அப்படின்னு அவங்க அப்பா சொன்னாரு. அதுக்கு குயில் இல்ல கல்யாணம் பண்ண ஆனா காக்காவா தான் கல்யாணம் பண்ணுவேன் இல்லனா செத்துருவேன் அப்படின்னு சொல்லிச்சு. கோவிலோட அப்பா. நீ செத்தா கூட சாவு. ஆனா அந்த அக்காக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன். அந்த காக்காவ கல்யாணம் பண்ணி வச்சா என்ன நாலு பேரு மதிப்பாங்களா? நம்ம சாதி சனம் மதிக்குமா? அப்படின்னு சொல்லி. கோயில. ரூம் குள்ள போட்டு. அடிச்சிட்டாங்க. காக்கா வீட்ல காக...

கறுப்பு நிறம்‌

  ஒரு பள்ளிக்கூட வாசலில்‌ பலூன்காரர்‌ ஒருவர்‌ பலூன்களை விற்றுக்‌ கொண்டிருந்தார்‌. அவை மேலே பறக்கும்‌ பலூன்கள்‌. அவர்‌ பலூன்களில்‌ காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக்‌ கொண்டிருந்தாள்‌. மெல்ல பலூன்காரரிடம்‌ வந்தாள்‌.  “இந்த பலூன்கள்‌ எல்‌ லாமே மேலே பறக்குமா?” என்று கேட்டாள்‌.  “ஓஞ்‌  பறக்குமே. என்ன விஷயம்‌?”'  “பலூன்‌ எந்த கலர்ல இருந்தாலும்‌ பறக்குமா?” என்று மீண்டும்‌ கேட்டாள்‌ அந்தச்‌ சிறுமி. சிறுமி ஏன்‌ இப்படிக்‌ கேட்கிறாள்‌ என்று பலூன்காரருக்கு புரியவில்லை. “ஏம்மா கேக்குற?”' “இல்ல, பலூன்‌ கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?” பலூன்காரருக்கு இப்போது விஷயம்‌ புரிந்தது. அந்தச்‌ சிறுமியின்‌ நிறம்‌ கறுப்பு. “பலூன்‌ மேல போறதுக்குக்‌ காரணம்‌ அதோட கலர்‌ இல்லம்மா. உள்ள இருக்கிற வாயு தான்‌. என்ன கலர்னாலும்‌ உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார்‌ வேண்டுமானாலும்‌ உயரலாம்‌'' என்றார்‌.