தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்

 தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்


ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக்கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி, தண்ணீருக்குள் விட்டிருக்கிறான்? என்றது.

அட முட்டாளே! அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை.

நன்றி கெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்.

கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்று சொல்லிக்கொண்டு அந்த மீன் துடித்துக்கொண்டிருந்த புழுவை விழுங்கியது. பின் மீனும் துடித்துக்கொண்டே பரிதாபமாக ஏமாந்தேனே! என்றது.

நன்றி கெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்று மீன் சொல்லியதையே சொல்லிக்காட்டியது தவளை.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்