குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.
ஒரு சீடன், “எதிர்ப்பு, வறுப்பு, துன்பம், வறுமை, சபலம், தோல்வி, கோபம், சோம்பல் இவை ஒரு மனிதனுக்கு வந்தால் இதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?”
என்று குருவிடம் கேட்டான்... '
எதிர்ப்பு வந்தால் அது உன் துணிவுக்கு வந்த சோதனை. வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்கு. வந்த சோதனை. துன்பம் வந்தால் அது உன் திறமைக்கு வந்த சோதனை. வறுமை வந்தால் அது உன் நேர்மைக்கு வந்த சோதனை. சபலம் வந்தால் அது உன் மன உறுதிக்கு வந்த சோதனை. தோல்வி. வந்தால் அது உன் வலிமைக்கு வந்த சோதனை. கோபம் வந்தால் அது உன் பொறுமைக்கு வந்த சோதனை. சோம்பல் வந்தால் அது உன் சுறுசுறுப்புக்கு வந்த சோதனை. மனிதர்களுள் 'வற்றியாளன். யார்?! என்று கேட்டால், இது போன்ற வேகத்தடைகளை விவேகமென்னும் விழிப்பு உணர்வினால் களைந்து சாதனை படைப்பவன் தான்!
என்றார் குரு...
குருவின் இந்த விளக்கத்தைக் கேட்டு சீடர்கள் தெளிவு பெற்றனர்...