வெட்டுக்கிளியும் ஆந்தையும்

 வெட்டுக்கிளியும் ஆந்தையும்


அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது.

உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், "கொஞ்சம் பாடுவதை நிறுத்து" என்று கேட்டது.

வெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, "நீ கண் தெரியாத குருட்டு பறவை! பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்" என்று திட்டியது.

தினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டு வந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து.

"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர்களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சங்கீதம் இனிமையானது.

அதை இன்னும் மெருகேற்ற என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அந்த அமிர்தத்தை இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா தருகிறேன்”, என்றது ஆந்தை.

ஆந்தையின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு மயங்கிய வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் அருகில் சென்றது.

அருகில் வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

நீதி: பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்