சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி
வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால்
கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக்
கற்றுக் கொடுத்திருந்தார்.
பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும்.
சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து
தருவார். 'ஒரு எலியை இந்த அளவுக்குப்
பழக்கி விட்டோமே' என்று அவருக்கு
தலைகால் புரியாத பெருமை.
இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக
ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில்
விட்டார்.எலிகளும்
பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது,
"இந்த ஆள் எப்படி?" அதற்கு பழைய
எலி சொன்னது, "இவனா? ரொம்ப
தத்தி, மணி அடிச்சதும் சாப்பாடு
எடுத்துட்டு வர்ற மாதிரி இவன
பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு
இருக்கே..அப்பப்பா! பய இப்பத்தான்
ஒருவழியா தேறிட்டு வர்றான்.."