நண்பகல் தூக்கம்

                                                நண்பகல் தூக்கம்


ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான்.

அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான்.

சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார்.

நீதி : நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்