Posts

சயின்டிஸ்ட்

Image
 சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். 'ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே' என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார்.எலிகளும்  பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, "இந்த ஆள் எப்படி?" அதற்கு பழைய எலி சொன்னது, "இவனா? ரொம்ப தத்தி, மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்.."

அன்பு என்றால் என்ன

Image
 அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை,  ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.  இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.  மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.  முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள். கேட்டபோது சொன்னாள்  நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்".   அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார். "அன்பு என்றால் இது தான்". நீதி: உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்... ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது

The Dog and His Shadow Moral Story in Tamil

  நாயும் அதன் நிழலும் முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது. செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், எலும்புத்துண்டை தறுமாறு' கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்". என்று கூறி விட்டுச்சென்றது. செல்லும் வழியில் பாலத்தை வேண்டியிருந்தது நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணிரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது அதைக் கண்ட நாய் இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்" என்று நினைத்தது. உடனே அது பலமாக லொள் லொள் எனக் குரைத்து கொண்டே தண்ணிரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது

தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்

  தூண்டில் மாட்டிய மீனும், தவளையும் ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி, தண்ணீருக்குள் விட்டிருக்கிறான்? என்றது. அட முட்டாளே! அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை. நன்றி கெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்று சொல்லிக்கொண்டு அந்த மீன் துடித்துக்கொண்டிருந்த புழுவை விழுங்கியது. பின் மீனும் துடித்துக்கொண்டே பரிதாபமாக ஏமாந்தேனே! என்றது. நன்றி கெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்று மீன் சொல்லியதையே சொல்லிக்காட்டியது தவளை.

பேராசை பெரு நஷ்டம்.

Image
   மீனவன் மீன்பிடிக்க தனது படகில் சென்றான். மீன் துண்டுகளை கடலில் போட்டான். சிறிதுநேரம் கழித்து. அந்த தூண்டிலில் ஒரு மீன் மாட்டியது. மாட்டிய மீனை படகில் எடுத்து வைத்தான். அப்போது அந்த மீன் மீனே உன்னை பார்த்து. மனிதனே ஏன் என்னை பிடித்தாய். என்று கேட்டது. நீ எப்படி பேசுற? நான் மந்திரமே. நீ எனக்கு விடுதலை தந்தாய். உனக்கு இரண்டு வரங்கள் தருகிறேன். வரம் என்ன வரம். நீ கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால். என்ன ஆனால்? ஒரு நாளைக்கு ஒரு வாரம் மட்டுமே கொடுக்க முடியும். பரவாயில்லை, என் வரத்தை நான் கேட்கிறேன். எனக்கு நிறைய காய்கறிகள் வேண்டும். என்று கேட்டான். மந்திர மீனு அவன் படகில் நிறைய காய்கறியை நிரப்பியது. பின்பு கடலுக்குள் சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்று கடலில் நடந்த அனைத்தையும் அவன் மனைவியிடம் சொன்னான். அதற்கு மனைவி. முட்டாளே! முட்டாளே! மந்திரம் என்கிட்ட யாராவது காய்கறி கேட்பாங்களா? வேற என்ன கேட்க வேண்டும்? என்றான் மீனவன்.அதற்கு மனைவி. மந்திரம் என்கிட்ட நிறைய தங்க முட்டையும் கேளுங்க. போதும் சொல்ற அளவுக்கு கேளுங்க. என்று மனைவி கூறினாள். மீனவன் கடலுக்குச் சென்றான். அந்த மீனும் கடலுக்கு ம...

சீடர்கள்‌ தெளிவு பெற்றனர்‌...

  குருகுலத்தில்‌ பாடம்‌ நடந்து கொண்டிருந்தது.  ஒரு சீடன்‌, “எதிர்ப்பு, வறுப்பு, துன்பம்‌, வறுமை, சபலம்‌, தோல்வி, கோபம்‌, சோம்பல்‌ இவை ஒரு மனிதனுக்கு வந்தால்‌ இதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?” என்று குருவிடம்‌ கேட்டான்‌... ' எதிர்ப்பு வந்தால்‌ அது உன்‌ துணிவுக்கு வந்த சோதனை. வெறுப்பு வந்தால்‌ அது உன்‌ பிடிப்புக்கு. வந்த சோதனை. துன்பம்‌ வந்தால்‌ அது உன்‌ திறமைக்கு வந்த சோதனை. வறுமை வந்தால்‌ அது உன்‌ நேர்மைக்கு வந்த சோதனை. சபலம்‌ வந்தால்‌ அது உன்‌ மன உறுதிக்கு வந்த சோதனை. தோல்வி. வந்தால்‌ அது உன்‌ வலிமைக்கு வந்த சோதனை. கோபம்‌ வந்தால்‌ அது உன்‌ பொறுமைக்கு வந்த சோதனை. சோம்பல்‌ வந்தால்‌ அது உன்‌ சுறுசுறுப்புக்கு வந்த சோதனை. மனிதர்களுள்‌ 'வற்றியாளன்‌. யார்‌?! என்று கேட்டால்‌, இது போன்ற வேகத்தடைகளை விவேகமென்னும்‌ விழிப்பு உணர்வினால்‌ களைந்து சாதனை படைப்பவன்‌ தான்‌!    என்றார்‌ குரு...   குருவின்‌ இந்த விளக்கத்தைக்‌ கேட்டு சீடர்கள்‌ தெளிவு பெற்றனர்‌... 

நீலகண்டன்

Image
                                                         நீலகண்டன் நீலகண்டன் ஒரு ஊரில் சிவன் கோயில் உள்ளது அதை வணங்க ஒரு சிவன் பக்தன் வந்தன்.‌‍.ஆனால் அவனை உள்ளே விட வில்லை கோயில் பூசாரி சிவ பத்தன்:  எனக்கு ஏன் உள்ளே அனுமதி இல்லை                                                    பூசாரி :  உன் உடை உன் உடம்பு எப்படி இருக்கு பாரு                                                  சிவ பத்தன்:  இதற்கு என் நல்லா தான் இருக்கு                                         ...