இந்திய தண்டனை சட்டம் பிரிவு 181 - 200
IPC-181\nஎவரேனும் ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பால் சட்டப்படி கட்டுப்பட்டு, ஏதாவதொரு பொருளில், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடமோ அல்லது அத்தகைய சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியை செய்து வைக்க அதிகாரம் கொண்ட பிற நபரிடமோ உண்மையைக் கூற வேண்டியவர், அத்தகைய பொதுப்பணியாளரிடமோ அல்லது மேற்கூறப்பட்டவாறு உள்ள பிற நபரிடமோ, அப்பொருளின்மீது பொய்யானது என அவருக்குத் தெரிந்தே அல்லது நம்பியோ அல்லது அது உண்மையானது என்று நம்பாமலோ, ஏதாவதொரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-182\nஒரு பொது ஊழியரிடம் நெஞ்சறிந்தே பொய்யை கூறுகிறோம். அதன் விளைவாக அந்த அதிகாரி தன்னுடைய கடமையை சரிவர செய்ய முடியாமல் தவறுதலாக நடக்க வேண்டி நேரிடும். தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பிறருக்கு தொல்லை தர நேரிடலாம். ஆகவே அத்தகைய பொய் தகவல் கொடுத்தவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனை...