இந்திய தண்டனை சட்டம் பிரிவு-101 to 120
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-101
கடைசி முந்தைய சட்ட பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரிப்புகளில் ஏதாவதொன்றின் கீழ் இல்லாத குற்றமாக இருந்தால், தனிநபர் தற்காப்பு உரிமையானது தாக்குபவருக்குத் தன்னிச்சையாக மரணத்தை விளைவிப்பதற்கு நீட்டிக்காது.ஆனால் சட்டப்பிரிவு 99 இல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்கீழ் மரணத்தை தவிர, பிற ஏதாவதொரு தீங்கை தாக்குபவருக்குத் தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்கிறது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-102
நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்ற அச்சம் எப்போது நமக்கு தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் உரிமையும் நமக்கு கிடைக்கிறது. நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும் புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும். நம்மை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம்.
உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையின் தொடக்கம் மற்றும் தொடர்ச்சி
உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையானது, குற்றத்தைப் புரிவதற்கான ஒரு முயற்சி அல்லது அச்சுறுத்தலிலிருந்து உடலின் ஆபத்திற்கான நியாமான எதிர்பார்ப்பு அச்சம் ஏற்பட்ட உடனேயே, அக்குற்றம் புரியப்பட்டிருக்காவிட்டாலும்கூட, தொடங்குகிறது;மற்றும், உடலின் ஆபத்திற்கான அத்தகைய எதிர்பார்ப்பு அச்சம் தொடர்கிற வரையில், அது தொடர்கிறது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-103
நமது சொத்துக்களை கொள்ளை அடிக்கவரும் போதும், இரவு நேரத்தில் வீட்டை இடித்து, உடைத்து உள்ளே நுழைய எத்தனிக்கும் போதும், தீ வைத்து சொத்துக்களை அளிக்க முனையும்போதும், திருடுவதற்காக அல்லது தொல்லை தருவதற்காக அத்துமீறி நம்மிடத்தில் நுழைய முயற்சி செய்யும்போதும் அந்த முயற்சியால் நமக்கு நம்மை அண்டியுள்ளவர்களுக்கும் மரணம் சம்பவிக்கலாம். என்ற அச்சம் ஏற்படும்போதும், அத்தகைய எதிரியை நாம் தாக்கி, அதனால் எதிரிக்கு மரணம் சம்பவித்தாலும் அதனை குற்றமாக கொள்ள முடியாது. அந்த செயல் தற்காப்புக்காக செய்யப்பட்டதாகவே கருதப்படவேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-104
மேலே குறிப்பிட்டுள்ள குற்றங்களின்றி திருட்டு, தொல்லை தருதல், வரம்பு மீறல் ஆகிய குற்றங்களை பிறர் செய்தாலும், செய்ய முயற்ச செய்தாலும் தற்காப்பு என்று முயற்சி செய்தாலும் தற்காப்பு என்று மரணத்தை தவிர வேறு எந்த தீங்கை வேண்டுமானாலும் எதிரிக்கு செய்யலாம். வேண்டுமென்றே மரணம் சம்பவிக்கும்படி மட்டும் செய்யக் கூடாது.
அத்தகைய உரிமை, மரணம் அல்லாத ஏதாவதொரு பிற தீங்கை விளைவிப்பதற்கு எப்போது நீட்டிக்கிறது
அக்குற்றமானது, கடைசி முந்தைய சட்டப்பிரிவில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விவரிப்புகளில் ஏதாவதொன்றின்கீழ் இல்லாத குற்றமாகவும், அதைப்புரிவதற்கு அல்லது அதைப்புரிய முயற்சிப்பதற்கு, தனிநபர் தற்காப்பு உரிமையை பயன்படுத்துகிற சூழ்நிலைகளிலான திருட்டு, வன்குறும்பு அல்லது குற்றமுறு அத்துமீறலாக இருந்தால், அந்த உரிமையானது, மரணத்தை தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்காது.ஆனால் சட்டப்பிரிவு 99 இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அந்த தவறு இழைப்பவருக்கு மரணம் அல்லாத, பிற ஏதாவதொரு தீங்கை தன்னிச்சையாக விளைவிப்பதற்கு நீட்டிக்கிறது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-105
சொத்துக்கு தற்காப்புரிமை ஏற்படும் மற்றும் நீடிக்கும் காலம் Commencement and continuance of the right of private defence of Property எப்போதும் நம்முடைய சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயம் உண்டாகிறதோ அப்பொழுதே நம்முடைய சொத்தினை பாதுகாக்கும் உரிமையும் நமக்குக் கிடைக்கின்றது. நமது சொத்தைத் திருட வரும் பொழுது, திருடனிடமிருந்து நமது சொத்தை மீட்கும் வரையில் நமக்கு அந்த உரிமை இருக்கிறது. அல்லது அவற்றை மீட்க அதிகாரிகளின் உதவி நமக்குக் கிடைக்கும் வரையில் அந்த உரிமை இருக்கிறது. அதேபோல் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வரும்போதும் கொள்ளையடிக்க முயற்சி செய்யும்போதும் மரணம் அல்லது தவறாகத் தடை செய்யும் அபாயம் ஏற்படும் பொழுதும், அத்தகைய அபாய நிலை அல்லது உணர்வு நீங்கும் வரையில் நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கின்றது. அதே போல் குற்றவாளி அத்துமீறி நுழைதல், சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து புரியும்வரை நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கின்றது.
சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையின் தொடக்கம் மற்றும் தொடர்ச்சி
சொத்திற்கு ஒரு நியாயமான எதிர்பார்ப்பு அச்சத்துடனான ஆபத்து தொடங்கியதும், சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது தொடங்குகிறது. திருட்டிற்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, குற்றம் புரிந்தவர் அச்சொத்துடன் அவர் சென்றுவிடும் வரையிலோ அல்லது பொது அதிகார அமைப்பினரிடமிருந்து உதவியைப் பெரும் வரையிலோ அல்லது பொது அதிகார அமைப்பினரிடமிருந்து உதவியைப் பெரும் வரையிலோ, அல்லது அச்சொத்தைத் திரும்பப் பெறப்படும் வரையிலோ நீட்டிக்கிறது.கொள்ளைக்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, குற்றம் புரிந்தவர் யாரேனும் ஒரு நபருக்கு மரணம் அல்லது காயம் அல்லது முறையற்ற தடுத்தலை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்க முயற்சிக்கின்ற காலம் வரையிலும் தொடர்கிறது அல்லது உடனடி மரணம் அல்லது உடனடி காயம் அல்லது உடனடித் தனிப்பட்ட தடுத்தலுக்கான அச்சம் உள்ள காலம் வரையிலும் தொடர்கிறது. குற்றமுறு அத்துமீறல் அல்லது வன்குறும்புக்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, குற்றம் புரிந்தவர் குற்றமுறு அத்துமீறல் அல்லது வன்குறும்பைப் புரிவதைத் தொடரும் காலம் வரையிலும் தொடர்கிறது. இரவில் வீட்டில்-கன்னமிடலுக்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, அத்தகைய வீட்டில்-கன்னமிடுதலால் தொடங்கப்பட்டிருக்கும் வீட்டில்-அத்துமீறல் தொடர்கின்ற காலம் வரையிலும் தொடர்கிறது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-106
மரணத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கக் கூடிய தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதியான மற்றொருவருக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அந்த செயல் குற்றமாகாது. உதாரணம்: அமர்சிங்கைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கூட்டம் தாக்க முற்படுகின்றது. கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யாமல் தப்பிக்க முடியாது. அனால் அப்படித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் பொழுது கூட்டத்தில் கலந்துள்ள குழந்தைகளுக்குத் தீங்கு நேரிடலாம். தற்காப்புக்கென அந்தக் கூட்டத்தை நோக்கிச் சுடுவதால், அந்தக் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அமர்சிங் மீது குற்றம் சுமத்த முடியாது.
அப்பாவி நபருக்குத் தீங்கின் அபாயம் அங்கிருக்கும்போது, அபாயகரமான தாக்குதலுக்கு எதிரான தனிநபர் தற்காப்பு உரிமை
எந்தவொரு தாக்குதல், மரணத்தின் எதிர்பார்ப்பு அச்சத்தை நியாயமாக ஏற்படுத்துகிறதோ, அந்த தாக்குதலுக்கெதிரான தனிநபர் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துகையில், ஒரு அப்பாவி நபருக்குத் தீங்கின் அபாயமின்றி அந்த உரிமையை அவர் முழுமையாய் பயன்படுத்த முடியாது என்ற சூழ்நிலையில் அக்குற்றம் புரிந்தவர் இருந்தால், அவரின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, அந்த அபாயத்தை எதிர்கொள்ளும் வரை நீட்டிக்கிறது. எடுத்துக்காட்டு A என்பவர், அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் ஒரு கும்பலால் தாக்கப்படுகிறார்.அக்கும்பலின்மீது துப்பாக்கியால் சுடாமல், அவரின் தனிநபர் தற்காப்பு உரிமையை அவர் முழுமையாகப் பயன்படுத்த முடியாது, மற்றும் அந்த கும்பலுடன் கலந்திருக்கிற இளம் சிறார்களுக்கு தீங்கின் அபாயமின்றி அவர் சுட முடியாது.அவ்வாறான துப்பாக்கிச் சூட்டினால், சிறார்களில் எவருக்கேனும் அவர் தீங்கு விளைவித்தால், A குற்றமேதும் புரியவில்லை.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-107
ஒரு செயலை செய்வதற்குத் தூண்டும் ஒரு நபர் என்பவர், அவர்:- முதலாவதாக:- அச்செயலை செய்வதற்கு யாரேனும் ஒரு நபரைத் தூண்டுபவர்:அல்லது இரண்டாவது :-அச்சதியின் தொடர்வில் ஒரு செயல் அல்லது சட்டவிரோதமான செய்வனச் செய்யாமை நடைபெற்றால், மற்றும் அச்செயலை செய்வதன் பொருட்டு, அச்செயலைச் செய்வதற்கான ஏதாவதொரு சதியில் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிற நபர் அல்லது நபர்களுடன் ஈடுபடுபவர். மூன்றாவது:-அச்செயலை செய்வதற்கு ஏதாவதொரு செயலினால் அல்லது சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால் உள்நோக்கத்துடன், உதவுபவர். விளக்கம்:-எந்தஒரு நபர், எந்தஒரு முக்கிய பொருண்மையை வெளிப்படுத்துவதற்கு அவர் கடமைப்பட்டிருக்கிறரோ, அந்தஒரு முக்கிய பொருண்மையை வேண்டுமென்றே தவறாக வெளிப்படுத்தலால், அல்லது வேண்டுமென்றே மறைத்தலால், ஒரு செயல் செய்யப்படுவதற்கு தன்னிச்சையாக செய்கிறாரோ, அல்லது செய்ய வைக்கிறாரோ, அல்லது செய்வதற்கு அல்லது செய்ய வைப்பதற்கு முயற்சிக்கிறாரோ, அந்தவொரு நபர் அச்செயலை செய்வதற்குத் தூண்டுகிறார் என கூறப்படுவார். எடுத்துக்காட்டு A என்ற ஒரு பொது அலுவலர், z என்பவரைக் கைது செய்வதற்கு, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்திலிருந்து ஒரு பிடி ஆணையால் அதிகாரமளிக்கப்பட்டிக்கிறார்.B என்பவர் அந்த பொருண்மையை, மற்றும் C என்பவர் z என்பவரல்லர் என்பதையும் தெரிந்துகொண்டு, C தான் z என வேண்டுமென்றே Aயிடம் வெளிப்படுத்துகிறார், மற்றும் அதனால் A யை உள்ள நோக்கத்துடன் C யைக் கைது செய்ய வைக்கிறார் .இங்கு C யைக் கைது செய்ய தூண்டுவதால், B தூண்டுதல் புரிகிறார். விளக்கம் 2:-எவரேனும், ஒரு செயலைப் புரிவதற்கு முன்போ அல்லது அந்நேரத்திலோ, அச்செயலைப் புரிவதற்கு முன்போ அல்லது அந்நேரத்திலோ, அச்செயலைப் புரிவதற்கு உதவுவதின் பொருட்டு ஏதாவதொன்றைச் செய்து மற்றும் அதனால், அதனினின் புரியப்படுதலை எளிதாக்கினால், அச்செயலைச் செய்வதற்கு உதவியதாகக் கூறப்படுவார்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-108
ஒரு குற்றத்தைத் புரிவதற்கு அல்லது ஒரு குற்றமாகின்ற எந்தஒரு செயலையும் புரிவதற்குத் தூண்டிய ஒரு நபர், அந்த தூண்டுபவருடைய அதே உள்நோக்கம் அல்லது தெரிதலுடன் ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சட்டத்தால் தகுதியுள்ள ஒரு நபரால் அது புரியப்பட்டால், ஒரு குற்றத்தை தூண்டியவர் ஆவரர். விளக்கம் 1:-ஒரு செயலின் சட்ட விரோத செய்வனச் செய்யாமையின் தூண்டுதல், அந்த தூண்டுபவர் அச்செயலைச் செய்வதற்கு அவர் கடமைப்பட்டவராக இல்லாவிட்டாலும் கூட அது ஒரு குற்றமாக ஆகலாம். விளக்கம் 2:-தூண்டுதல் குற்றத்தை ஏற்படுத்துவதற்கு, தூண்டப்பட்ட செயல் புரியப்பட்டிருக்க வேண்டும் அல்லது அக்குற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அவ்விளைவை ஏற்படுத்திருக்க வேண்டும் என்பது அவசியமானதன்று. எடுத்துக்காட்டுகள் (a ) A என்பவர், C என்பவரைக் கொலை செய்வதற்கு, B என்பவரைத் தூண்டுகிறார். B அவ்வாறு செய்ய மறுக்கிறார்.கொலை செய்வதற்கு B யைத் தூண்டியதற்கு, A குற்றவாளியாவார். (b ) A என்பவர், D என்பவரைக் கொலை செய்வதற்கு, B என்பவரைத் தூண்டுகிறார். அத்தூண்டுதலின் தொடர்வில், B, D யை குத்துகிறார்.D அக்காயத்திலிருந்து பிழைத்துக் கொள்கிறார்.கொலை செய்வதற்கு B யைத் தூண்டியதற்கு, A குற்றவாளியாவரர். விளக்கம் 3 :- தூண்டப்பட்ட அந்நபர் ஒரு குற்றம் புரிவதற்கு சட்டத்தால் தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்பது, அல்லது தூண்டிவிட்டவர் கொண்டிருக்கிற அதே குற்ற உள்நோக்கம் அல்லது தெரிதலை, அல்லது ஏதாவதொரு குற்ற உள்நோக்கம் அல்லது தெரிதலை அவன் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமானதன்று. எடுத்துக்காட்டுகள் a) A என்பவர், ஒரு குற்ற உள்நோக்கத்துடன், ஒரு குற்றத்தை புரிவதற்கு சட்டத்தால் தகுதியுடைய, மற்றும் A யை போலவே ஒரு குற்றமாகுமோ, அச்செயலைப் புரிவதற்கு ஒரு குழந்தையை அல்லது மனநலம் குன்றியவரை தூண்டுகிறார். இங்கு, அச்செயல் புரியாவிட்டாலும் அல்லது அவ்வாறில்லாவிட்டாலும், ஒரு குற்றத்தைத் தூண்டியதற்கு A குற்றவாளியாகிறார். b) A என்பவர், ழ் என்பவரைக் கொலை செய்யும் உள்நோக்கத்துடன், z இன் மரணத்தை விளைவிக்கிற ஒரு செயலைச் செய்வதற்கு, ஏழு வருடங்கள் வயதுக்கு கீழான B என்ற ஒரு குழந்தையை தூண்டுகிறார். B அந்த தூண்டுதலின் விளைவால், A இல்லாதபோது, அச்செயலைச் செய்து மற்றும் அதனால் z இன் மரணத்தை விளைவிக்கிறார். இங்கு, ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சட்டத்தால் B சட்டத்தால் தகுதி உடையவராக இல்லாதபோதும் கூட, ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சட்டத்தால் B தகுதி கொண்டிருப்பதைப் போல அதேமுறையில், மற்றும் கொலையைப் புரிந்ததற்கு A தண்டனைக்கு உள்ளாக வேண்டும், மற்றும் அதனால் மரண தண்டனைக்கு அவர் உட்பட வேண்டும். c) A என்பவர், B என்பவரை ஒரு குடியிருக்கும் வீட்டிற்கு தீ வைக்க தூண்டுகிறார்.A யினுடைய தூண்டுதலின் விளைவால், B அவரின் மனநலம் குன்றியதன் விளைவால், அச்செய்கையின் இயல்பைத் தெரிந்து கொள்ள, அல்லது அவர் செய்வது சட்டப்படி தவறா அல்லது சட்டத்திற்கு மாறானதா என்று அறிந்துகொள்ள இயலாமலிருக்கும்போது, அவ்வீட்டிற்கு தீ வைக்கிறார்.B எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை, ஆனால் A ஒரு குடியிருக்கும் வீட்டிற்கு தீ வைக்கும் குற்றத்தைத் தூண்டியதற்குக் குற்றவாளியவார் மற்றும் அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குள்ளாவார். (d ) A என்பவர் ஒரு திருட்டு புரியப்படச் செய்வதற்கு உள்நோக்கம் கொண்டு, B என்பவரை, z என்பவருக்குச் சொந்தமான சொத்தை, z இன் உடமையிலிருந்து எடுப்பதற்குத் தூண்டுகிறார்.அச்சொத்து, A க்கு சொந்தமானது என B நம்புவதற்கு A தூண்டுகிறார்.அது A யினுடைய சொத்து என நம்பி, நன்னம்பிக்கையில், z இன் உடமையிலிருந்து அச்சொத்தை B வெளியே எடுக்கிறார்.B இந்த தவறான கருத்தின் கீழ் செயல்பட்டதாலும், நேர்மையின்றி எடுக்காததாலும் மற்றும் அதனால் திருட்டைப் புரியவில்லை.ஆனால், திருட்டை தூண்டியதற்கு A குற்றவாளியாவார்.மற்றும் B திருட்டைப் புரிந்திருப்பதைப் போலவே, அதே தண்டனைக்கு உள்ளாக வேண்டும். விளக்கம் 4:-ஒரு குற்றத்தின் தூண்டுதல், ஒரு குற்றமாக இருக்கும்போது, அத்தகைய ஒரு தூண்டுதலின் தூண்டுதலும் ஒரு குற்றமாகும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவரைக் கொலை செய்வதற்கு, c என்பவரைத் தூண்டுமாறு B என்பவரைத் தூண்டுகிறார்.அதன்படி B, z ஐக் கொலை செய்வதற்கு c ஐத் தூண்டுகிறார் மற்றும் B இன் தூண்டுதலின் விளைவால் அக்குற்றத்தை C புரிகிறார்.B கொலைக்கான தண்டனையுடன் அவரின் குற்றத்திற்காக தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும்;மற்றும் A அக்குற்றத்தைப் புரிவதற்கு Bஐத் தூண்டிவிட்டதால், A யும், அதே தண்டனைக்குள்ளாக வேண்டும். விளக்கம் 5:-சதியாலான தூண்டுதல் குற்றம் புரியப்படுவதற்கு அதைப் புரியும் நபருடன் அத்தூண்டிவிடுபவர் அக்குற்றம் பற்றி திட்டமிட்டிருக்க வேண்டும் என்பது அவசியமானதன்று.எந்த சதியின் தொடர்பாக அக்குற்றம் புரியப்பட்டதோ, அச்சதியில் அவர் ஈடுபட்டிருந்தால் அது போதுமானதாகும். எடுத்துக்காட்டு A என்பவர், z க்கு விஷம் கொடுப்பதற்காக, B யுடன் ஒன்றுசேர்ந்து ஒரு திட்டமிடுகிறார்.அவ்விஷத்தை Aதான் கொடுக்க வேண்டுமென்று ஒப்புக்கொள்ளப்பட்டது.அதன்பின்பு B, ஒரு மூன்றாவது நபர் அந்த விஷத்தைக் கொடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டு, C என்பவருக்கு அத்திட்டத்தை, ஆனால் A யினுடைய பெயரைக் குறிப்பிடாமல் விளக்குகிறார்.C அவ்விஷத்தைக் கொண்டுவருவதற்கு உடன்படுகிறார், மற்றும் விளக்கப்பட்ட முறையில் அதைப் பயன்படுத்தும் நோக்கத்திற்காக அதைக் கொண்டுவந்து மற்றும் B யிடம் கொடுக்கிறார்;அதன்விளைவால் z மரணமடைகிறார்.இங்கு A மற்றும் C ஒன்றுசேர்ந்து சதி செய்யவிட்டாலும்கூட, இருந்தபோதிலும், எச்சதியின் தொடர்வில் z கொலை செய்யப்பட்டிருக்கிறாரோ, அச்சதியில் C ஈடுபட்டிருந்திருக்கிறார்.ஆகையினால், இச்சட்டப்பிரிவில் பொருள் விளக்கப்பட்டுள்ள குற்றத்தை C புரிந்திருக்கிறார், மற்றும் கொலைக்கான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-109
ஏதாவதொரு குற்றத்தைத் தூண்டிவிடும் எவரேனும், அந்த தூண்டிவிடுதலின் விளைவால் தூண்டப்பட்ட செயல் புரியப்பட்டால், மற்றும் அத்தகைய தூண்டுதலின் தண்டனைக்காக, இச்சட்டத்தால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காதபோது, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம்:- தூண்டுதலின் விளைவால், அல்லது சதியின் தொடர்வில், அல்லது எந்த உதவி தூண்டுதலாக ஆகுமோ அந்த உதவியுடன், ஒரு செயல் அல்லது குற்றம் புரியப்படும்போது, தூண்டுதலின் விளைவால் அது புரியப்பட்டிருப்பதாகக் கூறப்படும். எடுத்துக்காட்டுகள் (a )A என்பவர், B என்ற ஒரு பொதுப் பணியாளருக்கு, B இன் அலுவலகப் பணிகளைச் செய்கையில் சில சலுகைகளை Aக்குச் செய்வதற்கு, ஒரு வெகுமதியாக ஒரு கையூட்டைப் பெற்றுக் கொடுக்கிறார்.B அக்கையூட்டைப் பெற்றுக் கொள்கிறார்.சட்டப்பிரிவு 161இல் பொருள் விளக்கப்பட்டுள்ள குற்றத்தை A தூண்டிவிட்டிருக்கிறார். (b )A என்பவர், பொய்யான சாட்சியத்தை அளிப்பதற்கு B என்பவரைத் தூண்டுகிறார்.அதூண்டுதலின் விளைவால், B அக்குற்றத்தைப் புரிகிறார்.அக்குற்றத்தைத் தூண்டியதற்கு A குற்றவாளியவார். மற்றும் B க்கு உண்டான அதே தண்டனைக்கும் உள்ளாக வேண்டும். (c )A மற்றும் B என்பவர்கள், z என்பவருக்கு விஷம் கொடுப்பதற்கு ஒன்றுசேர்ந்து திட்டமிடுகிறார்கள்.அச்சதியின் தொடர்வில், A விஷத்தைக் கொண்டுவந்து மற்றும் z க்கு அதை அவர் கொடுக்கலாம் என்பதன் பொருட்டு, அதை Bக்குக் கொடுக்கிறார்.அச்சதியின்தொடர்வில், A இல்லாதபோது zக்கு, B விஷத்தைக் கொடுக்கிறார் மற்றும் அதனால் zஇன் மரணத்தை விளைவிக்கிறார்.இங்கு, B கொலைக்கு குற்றவாளியாவார்.A சதியினால் அக்குற்றத்தைத் தூண்டியதற்குக் குற்றவாளியாவார், மற்றும் கொலைக்கான தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-110
ஒரு குற்றத்தைப் புரியத் தூண்டும் எவரேனும், தூண்டிய நபரின் உள்நோக்கம் அல்லது தெரிதலிலிருந்து, வேறுபட்ட ஒரு உள்நோக்கம் அல்லது தெரிதலுடன் தூண்டிவிடப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டிவிட்டவரின் உள்நோக்கம்அல்லது தெரிதலுடன் எச்செயல் புரியப்பட்டிருந்தால் அது குற்றமாகுமோ, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் மற்றும் மற்றபடியாக இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-111
ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும் ஒரு வேறுபட்ட செயல் செய்யப்பட்டிருக்கும் போது, அதை அவர் நேரடியாகத் தூண்டிவிட்டதுபோலவே அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு, செய்யப்பட்ட அச்செயலுக்காக அத்தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார். விலக்கு:-இருப்பினும் செய்யப்பட்ட செயலானது தூண்டுதலின் ஒரு சாத்தியமான விளைவாக மற்றும் தூண்டுதலின் தாக்கத்தின்கீழ் அல்லது எந்தச் சதி அத்தூண்டுதலை ஏற்படுத்துகிறதோ, அந்த சதியின் உதவியுடன் அல்லது தொடர்வில் புரியப்பட்டு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a )z என்பவரின் உணவிற்குள் விஷத்தை வைப்பதற்கு, ஒரு குழந்தையை A என்பவர் தூண்டுகிறார், மற்றும் அந்நோக்கத்திற்க்காக அக்குழந்தையிடம் விஷத்தை கொடுக்கிறார்.அக்குழந்தை, அத்தூண்டுதலின் விளைவால், z இன் உணவிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த, Y என்பவரின் உணவிற்குள் அவ்விஷத்தைத் தவறுதலாக வைக்கிறான்.இங்கு, அக்குழந்தை A யினுடைய தூண்டுதலின் தாக்கத்தின்கீழ் செயல்பட்டிருந்தால் மற்றும் அச்செயல் தூண்டுதலின் ஒரு சாத்திய விளைவு சூழ்நிலையின்கீழ் செய்யப்பட்டிருந்தால், z யினுடைய உணவிற்குள் விஷத்தை வைப்பதற்கு அக்குழந்தையை அவர் தூண்டிவிட்டது போலவே, அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு A தண்டனைக்குள்ளாவரர். (b )A என்பவர்.z என்பவரின் வீட்டைக் கொளுத்துவதற்கு B என்பவரைத் தூண்டுகிறார்.B அவீட்டிற்கு தீ வைக்கிறார் மற்றும் அதே நேரத்தில் அங்குள்ள சொத்தின் திருட்டைப் புரிகிறார்.அவ்வீட்டைக் கொளுத்துவதற்கான தூண்டுதலுக்கு A குற்றவாளியாக இருந்தாலும்கூட, திருட்டைத் தூண்டியதற்கான குற்றவாளி ஆகமாட்டார்;ஏனென்றால், திருட்டு என்பது ஒரு முற்றிலும் வேறுபட்ட செயலாக இருக்கிறது.மற்றும் தீ வைப்பதன் ஒரு சாத்தியமான விளைவாக இல்லை. (c )B மற்றும் C என்பவர்களை, கொள்ளையின் நோக்கத்திற்காக நாடு இரவில் ஒரு வசிக்கும் வீட்டை உடைத்துத் திறப்பதற்கு A என்பவர் தூண்டுகிறார், மற்றும் அந்நோக்கத்திற்க்காக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார்.B மற்றும் C அவ்வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள், மற்றும் அங்கு வசிப்பவர்களில் ஒருவரான z என்பவரால் தடுக்கப்பட்டபோது, z யைக் கொலை செய்கிறார்கள்.இங்கு அந்த தூண்டுதலின் சாத்திய விளைவாக அந்தக் கொலை இருந்தால், A கொலைக்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குள்ளாவார்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-112
A என்பவர், B என்ற இடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்பட இருக்கிறது என்பதைத் தெரிந்தே, ஒரு எதிர்திசையில் இருக்கும் C என்ற ஒரு இடத்தில் ஒரு கூட்டுக்கொள்ளை புரியப்பட இருப்பதாக, நடுவருக்கு பொய்யாகத் தெரிவிக்கிறார், மற்றும் அதனால் அக்குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன், நடுவரைத் திசை திருப்புகிறார்.அத்திட்டத்தின் தொடர்வில் B என்ற அவ்விடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்படுகிறது.இச்சட்டப்பிரிவின்கீழ் A தண்டனைக்குள்ளாவார். கடைசி முந்தைய சட்டப்பிரிவின்கீழ் எந்தஒரு செயலுக்குத் தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாக வேண்டுமோ, அச்செயல் தூண்டப்பட்ட செயலுக்கும் கூடுதலாக புரியப்பட்டிருந்தால், மற்றும் ஒரு முற்றிலும் வேறான குற்றத்தை ஏற்படுத்தினால் அக்குற்றங்களில் ஒவ்வொன்றுக்காகவும் தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார். எடுத்துக்காட்டு A என்பவர், ஒரு பொதுப் பணியாளரால் செய்யப்பட்ட ஒரு உடைமை கைப்பற்றுகையாணையை பலத்தால் எதிர்ப்பதற்கு B என்பவரைத் தூண்டிவிடுகிறார்.அந்த உடைமை கைப்பற்றுகையாணையை நிறைவேற்றுகின்ற அலுவலருக்குத் தன்னிச்சையாகக் கொடுங்காயத்தை B விளைவிக்கிறார்.அந்த கைப்பற்றுகையாணையை எதிர்க்கும் குற்றம் மற்றும் தன்னிச்சையாகக் கொடுங்காயத்தை விளைவிக்கும் குற்றம் ஆகிய இரண்டு குற்றங்களையும் B புரிந்திருப்பதால், இரண்டு குற்றங்களுக்காகவும் B தண்டனைக்குள்ளாவார்;மற்றும் அந்த கைப்பற்றுகையாணையை எதிர்ப்பதில் B அநேகமாக தன்னிச்சையாக கொடுங்காயத்தை விளைவிப்பார் என A க்குத் தெரிந்திருந்தால், A யும் அக்குற்றங்களில் ஒவ்வொன்றுக்காகவும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-113
ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்த தூண்டிவிட்டவரின் பங்கிலான உள்நோக்கத்துடன் ஒரு செயல் தூண்டிவிடப்பட்டிருக்கும்போது, மற்றும் அத்தூண்டிவிடுதலின் விளைவால், தூண்டிவிட்டவர் எச்செயலுக்காகத் தண்டனைக்குள்ளாக வேண்டுமோ, அச்செயல் தூண்டிவிட்டவரால் எண்ணப்பட்டதிலிருந்து ஒரு வேறுபட்ட விளைவை ஏற்படுத்தினால், அவ்விளைவை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் அச்செயலை அவர் தூண்டிவிட்டார் என்பதுபோலவே அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு, இருப்பினும், தூண்டப்பட்ட அச்செயல் அவ்விளைவை அநேகமாக விளைவிக்கும் என அவருக்குத் தெரிந்திருந்தால் ஏற்படுத்தப்பட்ட அவ்விளைவிற்காக அத்தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவருக்குக் கொடுங்காயத்தை விளைவிப்பதற்கு B என்பவரைத் தூண்டுகிறார்.அத்தூண்டிவிடுதலின் விளைவால், z க்கு கொடுங்காயத்தை B விளைவிக்கிறார்.அதன் விளைவால் z மரணமடைகிறார்.இங்கு, தூண்டிவிடப்பட்ட அந்த கொடுங்காயம் அநேகமாக மரணத்தை விளைவிக்கும் என்று A க்குத் தெரிந்திருந்தால், கொலைக்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் தண்டிக்கப்படுத்தலுக்கு A உள்ளாவார்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-114
எப்போதெல்லாம் எந்தஒரு நபர், ஒரு தூண்டியவர் என்ற முறையில் அங்கு இல்லாவிட்டால் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாக வேண்டுமோ, அந்நபர் எச்செயல் அல்லது எக்குற்றத்திற்காக தூண்டிவிடப்பட்டதன் விளைவால் அவர் தண்டனைக்குள்ளவாரோ, அச்செயல் அல்லது அக்குற்றம் புரியப்படும்போது உடனிருந்தால், அவர் அத்தைகய செயலை அல்லது குற்றத்தைப் புரிந்திருப்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-115
குற்றம் புரியப்படாவிட்டால்:- எவரேனும் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றம் புரிவதை தூண்டினால், அந்த தூண்டுதலின் விளைவில் அக்குற்றம் புரியப்படாவிட்டால், மற்றும் அத்தகைய தூண்டுதலின் தண்டனைக்காக இச்சட்டதால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காவிட்டால், ஏழு வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். அதன் விளைவில் தீங்கை விளைவிக்கும் செயல் செய்யப்பட்டால்:- மற்றும் எந்தஒரு செயலுக்காக, தூண்டுதலின் விளைவில் தூண்டியவர் தண்டனைக்குள்ளவாரோ, மற்றும் எந்தஒரு செயல் யாரேனும் ஒரு நபருக்குக் காயத்தை விளைவிக்குமோ, அச்செயல் புரியப்பட்டால், தூண்டிவிட்டவர் ஏதாவதொரு வகையிலான பதினான்கு வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவரைக் கொலை செய்வதற்கு B என்பவரைத் தூண்டிவிடுகிறார்.அக்குற்றம் புரியப்படவில்லை.B, z யைக் கொலை செய்திருந்தால், அவர் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆகையினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனைக்கு மற்றும் ஒரு அபாரதத்திற்கும் A உள்ளாக வேண்டும்;மற்றும் அந்த தூண்டுதலின் விளைவால் zக்கு ஏதாவதொரு காயமேற்பட்டிருந்தால், அவர் பதினான்கு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனைக்கு மற்றும் அபாரதத்திற்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-116
குற்றம் புரியப்படாவிட்டால்:- எவரேனும், சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைத் தூண்டினால், அந்த தூண்டுதலின் விளைவில் அக்குற்றம் புரியப்படாவிட்டால், மற்றும் அத்தைகைய தூண்டுதலின் தண்டனைக்காக இச்சட்டத்தால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள மிக நீண்ட கால அளவில் நான்கில் ஒரு பகுதிக்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். தூண்டியவர் அல்லது தூண்டப்பட்ட நபர் குற்றத்தைத் தடுக்கும் கடமை எந்தஒரு பொதுப் பணியாளருக்கு இருக்கிறதோ, அந்த ஒருபொதுப் பணியாளராக இருந்தால் :- மற்றும் தூண்டியவர் அல்லது தூண்டப்பட்ட நபர், அத்தகைய குற்றம் புரிவதைத் தடுக்கும் கடமை எந்தஒரு பொதுப் பணியாளருக்கு இருக்கிறதோ, அந்த ஒருபொதுப் பணியாளராக இருந்தால், அக்குற்றம் புரிந்தவர் அக்குற்றத்திற்ககென வகை செய்யப்பட்டுள்ள மிக நீண்ட கால அளவில் ஒரு பாதியளவிற்கு நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a )B என்ற ஒரு பொது பணியாளர், அலுவல்முறைப் பணிகளை புரிகையில், ஏதாவது சலுகையை A என்பவருக்குச் செய்வதற்காக ஒரு வெகுமதியாக ஒரு கைய்யூட்டைக் Bக்குக் கொடுக்க A முனைகிறார்.அந்த கைய்யூட்டைப் பெறுவதற்கு B மறுக்கிறார்.இச்சட்டப்பிரிவின்கீழ் A தண்டனைக்குள்ளாவார். (b )A என்பவர், B என்பவரைப் பொய்யான சாட்சியம் அளிப்பதற்குத் தூண்டிவிடுகிறார்.இங்கு B பொய்யான சாட்சியம் அளிக்கவில்லை, இருந்தபோதிலும் இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்ட குற்றத்தை A புரிந்திருக்கிறார் மற்றும் அதன்படி தண்டனைக்குள்ளாவார். (c )கொள்ளையைத் தடுப்பதற்கு கடமையாகக் கொண்ட A என்ற ஒரு காவல் அலுவலர், கொள்ளையை புரிவதற்குத் தூண்டுகிறார்.இங்கு அக்கொள்ளை புரியப்பட்டிருக்கவிட்டாலும் கூட, B கொள்ளைக் குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் ஒரு பாதிக்கு, மற்றும் அபராதத்திற்கும் உள்ளாக வேண்டும். (d )கொள்ளைக் குற்றத்தைத் தடுப்பதை கடமையாகக் கொண்ட A என்ற ஒரு காவல் அலுவலரால், ஒரு கொள்ளை புரியப்பட்டுவதை B என்பவர் தூண்டிவிடுகிறார்.இங்கு அக்கொள்ளை புரியப்பட்டிருக்கவிட்டாலும் கூட, B கொள்ளைக் குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் பாதிக்கு மற்றும் அபராதத்திற்கும் உள்ளாக வேண்டும்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-117
எவரேனும், பெரும்பாலும் பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட ஏதாவதொரு எண்ணிக்கை அல்லது பிரிவின் நபர்களால் ஒரு குற்றம் புரியப்படுவதைத் தூண்டிவிட்டால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், ஒரு ஊர்வலத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரு எதிர்தரப்பு பிரிவின் உறுப்பினர்களைத் தாக்கும் நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் கூடுவதற்கு, பத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரிவினரைத் தூண்டுவதற்கு ஒரு சுவரொட்டியை ஒரு பொது இடத்தில் ஒட்டுகிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்திருக்கிறார்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-118
எவரேனும், மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைப் புரிய உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக அதற்கு உதவி செய்யக்கூடும் என தெரிந்தே; அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டத்தை ஏதாவதொரு செயல் அல்லது செய்வன செய்யாமையால், அல்லது ரகசியக் குறியீடு, அல்லது ஏதாவதொரு பிற தகவலை மறைக்கும் உபகரணத்தைப் பயன்படுத்துவதால் தன்னிச்சையாக மறைத்தால் அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானது என அவருக்குத் தெரிந்தே, ஏதாவதொரு வெளிப்படுதலை செய்தால், குற்றம் புரியப்பட்டால்:- அக்குற்றம் புரியப்பட்டால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் புரியப்படாவிட்டால்:- அல்லது அக்குற்றம் புரியப்படாவிட்டால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அந்த எந்தஒரு நேர்விலும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், B என்ற இடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்பட இருக்கிறது என்பதைத் தெரிந்தே, ஒரு எதிர்திசையில் இருக்கும் C என்ற ஒரு இடத்தில் ஒரு கூட்டுக்கொள்ளை புரியப்பட இருப்பதாக, நடுவருக்கு பொய்யாகத் தெரிவிக்கிறார், மற்றும் அதனால் அக்குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன், நடுவரைத் திசை திருப்புகிறார்.அத்திட்டத்தின் தொடர்வில் B என்ற அவ்விடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்படுகிறது.இச்சட்டப்பிரிவின்கீழ் A தண்டனைக்குள்ளாவார்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-119
ஒரு பொதுப் பணியாளராக இருக்கிற எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில், எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பதற்கு அவர் கடமை கொண்டுள்ளாரோ, எந்தஒரு குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக உதவி செய்யக்கூடும் என தெரிந்ததே. அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டமிருப்பதை ஏதாவதொரு செயல் அல்லது செய்வன செய்யாமையால், அல்லது ரகசியக் குறியீடு அல்லது ஏதாவதொரு பிற தகவலை மறைக்கும் உபகரணத்தைப் பயன்படுத்துவதால் தன்னிச்சையாக மறைத்தால் அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானது என அவருக்கு தெரிந்தே, ஏதாவதொரு வெளிப்படுதலைச் செய்தால், குற்றம் புரியப்பட்டால்:- அக்குற்றம் புரியப்பட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான, அந்த சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் ஒரு பாதியளவிற்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றம் மரணதண்டனை, முதலானவற்றுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:- அல்லது, அக்குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய இருந்தால், பத்து வருடங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்; குற்றம் புரியப்படாவிட்டால்:- அல்லது அக்குற்றம் புரியப்படாவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தைகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில் நான்கில் ஒருபகுதி வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்ற ஒரு காவல்துறை அலுவலர், அவரின் தகவலுக்கு வரலாமென்ற கொள்ளை புரிவதற்கான அனைத்துத் திட்டங்களையும் பற்றிய தகவலைக் கொடுப்பதற்கு சட்டப்படி கடமை கொண்டிருக்கும்போது, மற்றும் கொள்ளையைப் புரிவதற்கு B என்பவரின் திட்டங்களைத் தெரிந்தே.அக்குற்றம் புரிவதற்கு உதவி செய்யும் புரிவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் அத்தைகைய தகவலை அளிக்காமல் விட்டுவிடுகிறார்.இங்கு A ஒரு சட்டவிரோத விட்டுவிடுதலால், B இன் திட்டமிடுதல் இருப்பதை மறைந்திருக்கிறார், மற்றும் இச்சட்டத்தின் ஷரத்துகளின்படி தண்டனைக்குள்ளாகிறார்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு-120
எவரேனும், சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைப் புரிவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக உதவி செய்யக்கூடும் என தெரிந்தே. அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டமிடல் இருப்பதை, ஏதாவதொரு செயல் அல்லது சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால் தன்னிச்சையாக மறைத்தால், அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானதென அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு வெளிப்படுத்தலைச் செய்தால், குற்றம் புரியப்பட்டால்:- அக்குற்றம் புரியப்பட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில், நான்கில் ஒரு பகுதிக்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; குற்றம் புரியப்படாவிட்டால்:- மற்றும், அக்குற்றம் புரியப்படாவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய சிறைத்தண்டனையுடன் மிக நீண்ட கால அளவில், எட்டில் ஒரு பகுதிக்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள அத்தகைய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்;
