இந்திய தண்டனை சட்டம் பிரிவு-141-160

IPC-141\n.1. மத்திய அரசை அல்லது மாநில அரசை வன்முறைச் செயல்களாலும் அச்சுறுத்தல்களாலும் தத்தம் கடமையினைச் செய்யவிடாமல் தடுப்பது; \n2. சட்ட பூர்வமாக நிலைநாட்டப்பட ஒழுங்கை அல்லது நடவடிக்கையை எதிர்ப்பது; \n3. அத்துமீறி நுழைத்தாள், சொத்துக்களை அழித்தல், வேறு குற்றங்களை செய்தல்; \n4. மற்றவர்களின் தனி உரிமைகளை வன்முறைச் செயல்களினாலோ அல்லது அச்சுறுத்தல் நடவடிக்கைகளினாலோ தடுப்பது, பழிப்பது மறுப்பது; \n5. வன்முறைச் செயல்களின் மூலம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்யும்படி பிறரைக் கட்டாயப்படுத்துவது; ஆகிய குற்றங்களை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்தும் போது அந்தக் கூட்டத்தைச் சட்ட விரோதமான கூட்டம் என்று குறிப்பிடுகிறோம். \nசட்டவிரோதமான கும்பல் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஒரு கும்பல், அந்த கும்பலிலிருக்கிற நபர்களின் பொதுவான நோக்கம் பின்வருமாறு இருந்தால், ஒரு "சட்டவிரோதமான கும்பல் " என குறிப்பிடப்படும். முதலாவது:-மத்திய அல்லது ஏதாவதொரு மாநில அரசாங்கம் அல்லது பாராளுமன்றம் அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் சட்டமன்றத்தை அல்லது யாரேனும் ஒரு பொதுப் பணியாளரின் சட்டபூர்வமான அதிகாரத்தைப் பயன்படுத்தும் அத்தகைய பொதுப் பணியாளரை, குற்றமுறு பலப்பிரயோகத்தால், அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதலால் பணிய வைப்பதற்கு ; அல்லது இரண்டாவது :-ஏதாவதொரு சட்டத்தை அல்லது ஏதாவதொரு சட்டப்பூர்வ அழைப்பாணை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கு அல்லது மூன்றாவது:-ஏதாவதொரு வன்குறும்பு அல்லது குற்றமுறு அத்துமீறல் அல்லது பிற குற்றத்தைப் புரிவதற்கு; நான்கவதாவது:-யாரேனும் ஒரு நபருக்கு, குற்றமுறு பலப்பிரயோகம், அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதல் வழிகளால், ஏதாவதொரு சொத்தை எடுப்பதற்கு அல்லது உடைமயில் பெற்றுக் கொள்வதற்கு அல்லது யாரேனும் ஒரு நபர் அனுபவிக்கும் ஒரு பாதையின் உரிமையை, அல்லது நீரின் பயன்பாட்டை அல்லது அவர் உடைமை அல்லது அனுபவம் கொண்டிருக்கிற ஒரு புலப்படாத உரிமையை இழக்கச் செய்வதற்கு, அல்லது ஏதாவது உரிமையை அல்லது உள்ளதாகக் கருதப்படும் உரிமையைச் செயல்படுத்துவதற்கு அல்லது ஐந்தாவது:-குற்றமுறு பலப்பிரயோகம், அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதல் வழிகளால் யாரேனும் ஒரு நபரை, அவர் சட்டப்படி செய்வதற்குக் கடமைப்படாததைச் செய்வதற்கு அல்லது அவர் சட்டப்படி செய்வதற்கு உரிமை கொண்டுள்ளதை செய்யாமல் விட்டுவிடுவதற்குக் கட்டாயப்படுத்துவதற்கு, விளக்கம்:-எந்தஒரு கும்பல், அது கூடியபோது சட்டவிரோதமாக இல்லையோ, அந்தவொரு கும்பல் அதன்பின்பு, ஒரு சட்டவிரோதமான கும்பலாக மாறலாம். IPC-142\nசட்ட விரோதமாகக் கூடிய கூட்டம் என்று அறிந்து பின்னரும் அந்தக் கூட்டத்தை விட்டு விலகிச் செல்லாமல் அந்த கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவொருவரும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்கள். சட்டவிரோதமான கும்பலின் உறுப்பினராக இருத்தல் எவரேனும், எந்த பொருண்மைகள் ஏதாவதொரு கும்பலை ஒரு சட்டவிரோதமான கும்பலாக்குமோ, அந்த பொருண்மைகளை அறிந்திருக்கும் போது, அந்தக் கும்பலில் உள்நோக்கத்துடன் சேர்ந்தால், அல்லது அதில் தொடர்ந்திருந்தால், ஒரு சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினர் என கூறப்படுவார். IPC-143\nஅத்தகைய சட்ட விரோதமான கூட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேற்படாத சிறைக்காவலுடன் கூடிய அபராதம் தண்டனையாக விதிக்கப்படும். தண்டனை ஒரு சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினராக இருக்கின்ற எவரேனும், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-144\nசட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதங்கள் அல்லது மரணத்தை விளைவிக்கத்தக்க ஆயுதங்களுடன் செல்வோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். அபாயகரமான ஆயுதமேந்தி சட்டவிரோதமான கும்பலில் சேர்தல் எவரேனும் ஏதாவதொரு அபாயகரமான ஆயுதத்தை, அல்லது அநேகமாக மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் ஏதாவதொன்றை ஏந்தி, ஒரு சட்டவிரோதமான கும்பலின் உறுப்பினராக இருக்கின்றபோது இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-145\nசட்ட விரோதமாகக் கூடியுள்ள கூட்டத்தைக் கலந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிடலாம். அந்த உத்தரவுக்குப் பிறகும் கலையாமல் இருக்கும் சட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலைந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றதைத் தெரிந்தும், சட்டவிரோதமான கும்பலில் சேர்தல் அல்லது தொடர்ந்திருத்தல் எவரேனும் ஒரு சட்டவிரோதமான கும்பல், சட்டத்தால் வரையறுக்கப் பட்டுள்ள முறையில் கலைந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது என தெரிந்த, அத்தகைய சட்டவிரோதமான கும்பலில் சேர்ந்தால் அல்லது தொடர்ந்திருந்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும். IPC-146\nசட்ட விரோதமான கூட்டம் தனது பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வன்முறைச் செயல்களில் ஈடுபடும்பொழுது அந்தக் கூட்டம் கலகம் செய்வதாகக் கொள்ளப்படும். கலகம் ஒரு சட்டவிரோதமான கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதில் அத்தகைய கும்பலால், அல்லது அதனிலுள்ள யாரேனும் ஒரு உறுப்பினரால் பலப் பிரயோகம் அல்லது வன்முறை பயன்படுத்தப்படும்போதெல்லாம், அத்தகைய கும்பலின் ஒவ்வொரு உறுப்பினரும் கலகக் குற்றத்திற்கு குற்றவாளியாகிறார். IPC-147\nகலகம் செய்யும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலகத்திற்க்கான தண்டனை கலகத்திற்குக் குற்றவாளியாகும் எவரேனும், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும். IPC-148\nகலகம் செய்யும் சட்டவிரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் அல்லது மரணத்தை உண்டாகக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். அபாயகரமான ஆயுதமேந்திக் கலகம் ஒரு அபாயகரமான ஆயுதத்தை அல்லது அநேகமாக மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் ஏதாவதொன்றை ஏந்தி கலகத்திற்கு குற்றவாளியாகும் எவரேனும், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும். IPC-149\nசட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்த நபர்களில் யார் எந்தக் குற்றத்தைப் புரிந்தாலும் அப்பொழுது அந்தச் சட்டவிரோதமான கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அந்தக் குற்றத்தில் நேரடிப் பங்கு உண்டு. அவர்கள் அதற்கேற்ற தண்டனையைப் பெறவேண்டும். பொதுவான நோக்கத்தை நிறைவேற்றும் போது புரியப்பட்ட குற்றத்திற்கு, சட்டவிரோதமான கும்பலின் ஒவ்வொரு உறுப்பினரும் குற்றவாளியாவார் ஒரு சட்டவிரோதமான கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுகையில், அந்த கும்பலின் யாரேனும் ஒரு உறுப்பினரால், அல்லது அந்த நோக்கத்தை நிறைவேற்றுகையில் அநேகமாகப் புரியப்படக் கூடும் என அந்த கும்பலின் அத்தகைய உறுப்பினர்களுக்குத் தெரிந்தே ஒரு குற்றம் புரியப்பட்டால், அக்குற்றம் புரியப்படும் நேரத்தில் அதே கும்பலில் ஒரு உறுப்பினராகயிருக்கும் ஒவ்வொரு நபரும், அக்குற்றத்திற்குக் குற்றவாளியாகிறார். IPC-150\nஎவரேனும் ஏதாவதொரு சட்டவிரோதமான கும்பலில் சேர்வதற்கு அல்லது ஒரு உறுப்பினராவதற்கு, யாரேனும் ஒரு நபரைக் கூலிக்கு அமர்த்தினால், அல்லது ஈடுபடுத்தினால், அல்லது பணிக்கு அமர்த்தினால் அல்லது ஊக்குவித்தால், அல்லது கூலிக்கு அமர்த்துதல், ஈடுபடுத்துதல் அல்லது பணிக்கு அமர்த்துதலின் தொடர்வாக, அத்தகைய சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினரான யாரேனும் ஒரு அத்தகைய நபரால் புரியப்படும் ஏதாவதொரு குற்றத்திற்காக அத்தகைய சட்டவிரோதமான கும்பலில் அவர் ஒரு உறுப்பினர், அல்லது அத்தகைய குற்றத்தை அவரே புரிந்திருக்கிறார் போன்று அதே முறையில், அத்தகைய சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினராக தண்டிக்கப்பட வேண்டும். IPC-151\nஎவரேனும், பொது அமைதிக்கு ஒரு பங்கத்தை அநேகமாக விளைவிக்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஏதாவதொரு கும்பலில், அத்தகைய கும்பல் கலைந்து செல்வதற்கு சட்டப்படியான உத்தரவிடப்பட்டிருப்பதற்குப் பின்னர் தெரிந்தே சேர்ந்தால் அல்லது தொடர்ந்திருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும். விளக்கம்:-அந்தக் கும்பலானது, சட்டப்பிரிவு 141 இன் பொருளின்படியான ஒரு சட்டவிரோதமான கும்பலாயிருந்தால், குற்றம் புரிந்தவர் சட்டப் பிரிவு 145 இன் கீழ் தண்டிக்கப்படக் கூடும் IPC-152\nஒரு கழகத்தை அடக்க முற்படும் அரசாங்க அதிகாரியை எதிர்ப்போர், தடுப்போர், எதிர்த்து வன்செயல்புரிவோர் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். கலகம் முதலானவற்றை அடக்கும் போது, பொதுப் பணியாளரைத் தாக்குதல் அல்லது தடுத்தல் எவரேனும், யாரேனும் ஒருப் பொதுப்பணியாளரை, அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில் அவரின் கடமையை ஆற்றுகையில், ஒரு சட்டவிரோதமான கும்பல் கலைந்து செல்வதற்கு, அல்லது ஒரு கலகம் அல்லது சச்சரவை அடக்குவதற்கான பெருமுயற்சியில், தாக்கினால் அல்லது தாக்குவதற்கு அச்சுறுத்தினால், அல்லது தடுத்தால் அல்லது தடுப்பதற்கு முயன்றால் அல்லது குற்றமுறு பலப் பிரயோகத்தை பயன்படுத்தினால், அல்லது அச்சுறுத்தினால் அல்லது முயன்றால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும். IPC-153\nகலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். தூண்டுதலின் விளைவாகக் கலகம் ஏற்படாவிட்டாலும் கழகத்தை தூண்டியவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக் காவலுடன் கூடிய அபராதமும் தந்தையாக விதிக்கப்படும். கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல் எவரேனும், எந்தவொன்று சட்டவிரோதமானதோ, அந்தஒன்றைச் செய்கையில், ஆழ்ந்த வெறுப்புடன், அல்லது வேண்டுமென்றே, யாரேனும் ஒரு நபருக்கு ஏற்படுத்தும் ஆத்திரமூட்டலானது கலகம் புரியப்படும் குற்றத்தை விளைவிக்கும் என்ற உள்நோக்கத்தில் அல்லது அநேகமாக விளைவிக்கும் என தெரிந்தே அத்தகைய ஆத்திரமூட்டலை ஏற்படுத்தி அத்தகைய ஆத்திரமூட்டலின் விளைவில் கலகக் குற்றம் புரியப்பட்டால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அந்த கலகக் குற்றம் புரியப்படாவிட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-154\nயாரும் தம்முடைய இடத்தில் சட்ட விரோதமான கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது கலகம் நடைபெறுவதையும் அனுமதிக்கக் கூடாது. ஒருவருடைய நிலத்தில் அத்தகைய சட்ட விரோதமான கூட்டம் அல்லது கலகம் நடைபெற்றால் அதனைப்பற்றி உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும். அப்படி அவர் அறிவிக்காமல் இருப்பது குற்றம். அத்தகைய கூட்டத்தை அல்லது கழகத்தை அனுமதித்தாலும் குற்றம், அந்தக் குற்றத்திற்காகத் தண்டனையாக அவருக்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தை நிலைச் சொந்தக்காரர் நேரடியாகப் புரியாவிட்டாலும் அவருடைய ஆள் அல்லது பிரதிநிதி அல்லது மேலாளர் செய்தாலும் அபராதம் விதிக்கப்படும். அந்த குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் உடனே எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் குற்றமாகும். எந்த நிலத்தில் ஒரு சட்டவிரோதமான கும்பல் கூடியிருக்கிறதோ, அந்த நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரர் எப்போதெல்லாம் ஏதாவதொரு சட்டவிரோதமான கும்பல் அல்லது கலகம் நடைபெறுகிறதோ, அப்போது எந்த நிலத்தில் அத்தகைய சட்டவிரோதமான கும்பல் கூடியிருக்கிறதோ, அல்லது அத்தகைய கலகம் புரியப்பட்டிருக்கிறதோ, அந்த நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரர் மற்றும் அத்தகைய நிலத்தில் ஒரு நலனைக் கொண்டிருக்கும் அல்லது அவரின் முகவருக்கு அல்லது மேலாளருக்கு, அத்தகைய குற்றம் புரியப்பட்டு கொண்டிருக்கிறது அல்லது புரியப்பட்டு இருக்கிறது என தெரிந்தே அல்லது அநேகமாக புரியப்படும் என நம்புவதற்கு காரணமிருக்கும் போது மிக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முதன்மை அலுவலருக்கு, அவரின் அல்லது அவர்களின் சார்பாக மிக விரைவில் தகவல் கொடுக்கவில்லையென்றால், மற்றும் அது புரியப்பட இருக்கிறது என்று அவர் அல்லது அவர்கள் நம்புவதற்குக் காரணமிருக்கும் நேர்வில், அதைத் தடுப்பதற்கு, அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டப்படியான முறைகளை பயன்படுத்தவில்லையெனில், மற்றும் அது நடைபெற்றிருக்கும் போது அந்த கலகம் அல்லது சட்டவிரோதமான கும்பலைக் கலைப்பதற்கு அல்லது அடக்குவதற்கு அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டப்படியான முறைகளை பயன்படுத்தவில்லையெனில், ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மிகாத அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-155\nசட்ட விரோதமான ஒரு கூட்டம் கலகம் செய்கின்றது. கலகம் நடைபெறும் இடத்தின் சொந்தக்காரருக்கு ஆதரவாக அந்த கலகம் நடைபெற்றாலும், அல்லது நிலச்சொந்தக்காரரின் உரிமைக்காகக் கலகம் நடைபெற்றாலும், அல்லது நிலைச் சொந்தக்காரருக்குச் சாதகமாகக் கலகம் நடைபெற்றாலும் அல்லது கழகத்தின் மூலம் அவருக்கு ஏதாவது நன்மை அல்லது லாபம் ஏற்படுவதற்கான இருந்தாலும், அந்த நிலத்தின் சொந்தக்காரர் அதனைத் தடுப்பதற்கு அல்லது அடக்குவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அந்த நிலத் (இடம்)-தின் சொந்தக்காரர் அல்லது அவருடைய பிரதிநிதி அல்லது மேலாளர் அந்தச் சட்டவிரோதமான கூட்டத்தை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். எந்த நபரின் நலனுக்காக கலகம் புரியப்பட்டதோ, அந்த நபருக்கான தண்டனை எப்போதெல்லாம் எந்தவொரு நிலத்தின் பொருட்டு ஒரு கலகம் நடைபெறுகிறதோ, அந்தவொரு நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரராக இருக்கும், அல்லது அத்தகைய நிலத்தில் அல்லது அக்கலகத்தை ஏற்படுத்திய ஏதாவதொரு சர்ச்சையின் பொருளில் ஏதாவதொரு நலனைக் கோருகின்ற, அல்லது அதிலிருந்து ஏதாவதொரு நலனைப் பெற்றிருக்கிற அல்லது ஏற்றிருக்கிற யாரேனும் ஒரு நபரின் நலனுக்காக அல்லது அவரின் சார்பில் அத்தகைய கலகம் புரியப்படுகிறதோ, அப்போது அவர் அவரின் அவரின் முகவர் அல்லது மேலாளர் அத்தகைய கலகம் அநேகமாக புரியப்படும் அல்லது எந்தவொரு சட்டவிரோதமான கும்பலால் அத்தகைய கலகம் புரியப்படுமோ, அந்தவொரு சட்டவிரோத கும்பலால் அநேகமாக நடத்தப் படும் என நம்புவதற்கு காரணமிருக்கும்போது அத்தகைய கும்பல் அல்லது கலகம் நடைபெறுவதைத் தடுப்பதற்கு, மற்றும் அதை அடக்குவதற்கு மற்றும் கலைப்பதற்காக அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டபூர்வமான வழிகளையும் முறையே பயன்படுத்தவில்லையென்றால், அத்தகைய நபர் அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-156\nஒரு நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அந்த நிலத்தை வைத்திருப்பவரின் நலம் கருதிக் கலகம் நடைபெற்றால், அவருடைய பிரதிநிதி அல்லது, மேலாளர் கலகம் நடைபெறவிருக்கிறது என்று தெரிந்த பின்னும் அதனை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அந்த பிரதிநிதி அல்லது மேலாளரும் குற்றம் புரிந்தவர் ஆவார். அதற்காக அவருக்கும் அபராதம் விதிக்கப்படும். போது அமைதியையும், ஒழுங்கையும் கருதி யாரும் எத்தகைய சட்டவிரோதக் கூட்டத்தையும் எந்த இடத்திலும் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய கூட்டத்தால் எத்தகைய பலனையும் அடைய முயற்ச செய்யக் கூடாது என்பதே இந்த பிரிவுகளின் நோக்கமாகும். சொந்தக்காரர் அல்லது அனுபவதாரரின் எந்தவொரு முகவர் நலனுக்காக கலகம் புரியப்படுகிறதோ, அந்தவொரு முகவருக்கான தண்டனை எப்போதெல்லாம், எந்தவொரு நிலத்தின் பொருட்டு ஒரு கலகம் நடைபெறுகிறதோ, அந்தவொரு நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரராக இருக்கும், அல்லது அத்தகைய நிலத்தில் அல்லது அக்கலகத்தை ஏற்படுத்திய ஏதாவதொரு சர்ச்சையின் பொருளில் ஏதாவதொரு நலனைக் கோருகின்ற, அல்லது அதிலிருந்து ஏதாவதொரு நலனைப் பெற்றிருக்கிற அல்லது ஏற்றிருக்கிற யாரேனும் ஒரு நபரின் நலனுக்காக அல்லது அவரின் சார்பில் அத்தகைய கலகம் புரியப்படுகிறதோ, அப்போது, அத்தகைய நபரின் முகவர் அல்லது மேலாளர், அத்தகைய கலகம் அநேகமாக புரியப்படும் அல்லது எந்தவொரு சட்டவிரோதமான கும்பலால் அத்தகைய கலகம் புரியப்படுமோ, அந்தவொரு சட்டவிரோத கும்பலால் அநேகமாக நடத்தப்படும் என நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, அத்தகைய முகவர் அல்லது மேலாளர், அத்தகைய கலகம் அல்லது கும்பல் நடைபெறுவதைத் தடுப்பதற்கு, மற்றும் அதை அடக்குவதற்கு மற்றும் கலைப்பதற்காக, அவரின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டபூர்வமான வழிகளையும் முறையே பயன்படுத்தவில்லையென்றால், அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-157\nசட்ட விரோதமான ஒரு கூட்டத்துக்குப்புகலிடம் கொடுப்பது குற்றமாகும். ஆகவே சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அல்லது சட்டவிரோதமான கூட்டத்திற்கு என்று அமர்த்தப்பட்டவர்களை அல்லது சட்டவிரோதமான கூட்டத்திற்கென்று கூலிக்கு அழைக்கப்படுகின்றவர்களை அவர்கள் மேலே கூறியபடி சட்ட விரோதமான கூட்டத்தினர் என்று அறிந்த பின்னும் அவர்களை வரவேற்பதும், தம்முடைய இடத்தில் அவர்கள் ஒன்று சேர்வதற்கு அனுமதிப்பதும், அவர்களுக்குப் புகலிடம் தருவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். ஒரு சட்டவிரோதமான கும்பலுக்காக, கூலிக்கு அமர்த்தப்பட்ட நபர்களுக்கு புகலிடமளித்தல் எவரேனும் ஒரு சட்டவிரோதமான கும்பலுக்காக, கூலிக்கு அமர்த்தப்பட, ஈடுபடுத்தப்பட அல்லது பணியமர்த்தப்பட அல்லது உறுப்பினர்களாக சேர்வதற்கு அல்லது ஆவதற்கு யாரேனும் நபர்களை, அத்தகைய நபர்கள் கூலிக்கு அமர்த்தப்படுவார்கள், ஈடுபடுத்துவார்கள் அல்லது பணிக்கமர்த்தப்படுவார்கள் என தெரிந்தே, அவரின் அனுபவத்தில் அல்லது பொறுப்பில் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள ஏதாவதொரு வீடு அல்லது வளாகத்தில் புகலிடமளித்தால், பெற்றால் அல்லது ஒன்றுசேர்த்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-158\nஇந்தச் சட்டத்தின் 141-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஒன்றைப் புரிவதற்காக அல்லது துணை புரிவதற்காக யாரவது அமர்த்தப்பட்டாலும், கூலிக்கு அமர்த்தப்பட்டாலும் அல்லது அமர்த்துவதற்கு முயற்சி நடைபெற்றாலும் குற்றமாகும். இந்த குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் விதிக்கலாம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அப்படி அமர்த்தப்பட்ட நபர் மரணத்தை உண்டாக்கக் கூடிய ஆயுதம் அல்லது அபாயகரமான ஆயுதம் தாங்கி அந்தக் கூட்டத்தில் செல்ல முன்வந்தால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். ஒரு சட்டவிரோதமான கும்பல் அல்லது கலகத்தில் பங்கு கொள்வதற்கு கூலிக்கு அமர்த்தப்படல் எவரேனும் சட்டப் பிரிவு 141இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஏதாவதொன்றைச் செய்வதற்கு அல்லது செய்ய உதவுவதற்கு ஈடுபடுத்தப்பட்டால், அல்லது கூலிக்கு அமர்த்தப் பட்டால், அல்லது கூலிக்கு அமர்த்தப்பட அல்லது ஈடுபடுத்தப்பட முனைந்தால், அல்லது முயன்றால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது ஆயதமேந்திச் செல்வதற்கு:- மற்றும் எவரேனும், மேற்கூறப்பட்டவறாக அவ்வாறு ஈடுபடுத்தப்பட்டு அல்லது கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் போது ஏதாவதொரு அபாயகரமான ஆயுதத்துடன் அல்லது மரணத்தை அநேகமாக விளைவிக்கும் குற்றத்தின் ஒரு ஆயுதமாக எந்தவொன்றைப் பயன்படுத்தலாமோ, அந்தவொரு ஆயுதமேந்திச் சென்றால் அல்லது ஈடுபட்டால் அல்லது ஆயுதத்துடன் செல்வதற்கு முனைந்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-159\nபொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் சண்டை பிடிப்பதும் வசை பாடுவதும் குற்றமாகும். சச்சரவு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், ஒரு பொது இடத்தில் புரியும் சண்டையால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும்போது, அவர்கள் "ஒரு சச்சரவைப் புரிந்ததாகக்" கூறப்படுவார்கள். IPC-160\nமேலே குறிப்பிட்டுள்ள குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு ஒரு மாத காலத்திற்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது 100 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். சச்சரவு புரிவதற்கான தண்டனை எவரேனும், ஒரு சச்சரவைப் புரிந்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ஒரு நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Popular posts from this blog

Tamil BNS Privacy Policy

Privacy Policy

பேராசை பெரு நஷ்டம்.