இந்திய தண்டனை சட்டம் பிரிவு-121-140

IPC-121 
எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தால் அல்லது அத்தகைய போரைத் தொடுப்பதற்கு முயன்றால் அல்லது அத்தகையப் போரை தொடுப்பதற்கு தூண்டினால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு புரட்சியில் சேர்கிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்ட குற்றத்தைப் புரிந்திருக்கிறார். 

  IPC-122
எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் அல்லது போர் தொடுப்பதற்குத் தயாராக இருந்து, ஆட்கள், ஆயுதங்கள் அல்லது படைக்கலன்களைச் சேகரித்தால் அல்லது மற்றபடியாக போர்த் தொடுப்பதற்குத் தயாரானால் ஆயுள் சிறைத்தண்டனை அல்லது பத்து வருடங்களுக்கு மிகாத ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.

IPC-123
எவரேனும், ஏதாவதொரு ஒரு செயலினால் அல்லது ஏதாவதொரு சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான ஒரு திட்டம் இருப்பதை மறைத்து, அத்தகைய மறைத்தலானது, அத்தகைய போர் தொடுத்தலுக்கு உதவியாக அமையுமென்ற உள்நோக்கத்தில் அல்லது அத்தகைய மறைத்தலானது உதவி செய்யக்கூடுமென்று தெரிந்தே மறைத்தால், பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். 

  IPC-124
எவரேனும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால், அல்லது மற்றபடியாக இந்தியாவில் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம் 1:-"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது. விளக்கம் 2:-பகைமை, அவமதிப்பு அல்லது அவநம்பிக்கையத் தூண்டாமல் அல்லது தூண்ட முயற்சிக்காமல், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சட்டப்பூர்வ முறைகளால் அவைகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு நோக்கத்துடன் கண்டனத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள், இச்சட்டப்பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அமையாது. விளக்கம் 3:-பகைமை, அவமதிப்பு அல்லது அவநம்பிக்கையைத் தூண்டாமல் அல்லது தூண்ட முயற்சிக்காமல், அரசாங்கத்தின் நிர்வாக அல்லது பிற செயல்பாட்டின் கண்டனத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள், இச்சட்டப்பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அமையாது. IPC-125\nஎவரேனும் இந்திய அரசாங்கத்துடன் இணக்கத்தில் அல்லது அமைதி உறவில் உள்ள ஏதாவதொரு ஆசிய நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுத்தால் அல்லது அத்தைகைய போரைத் தொடுக்க முயன்றால் அல்லது அத்தகைய போரைத் தொடுக்கத் தூண்டினால் அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-126\nஎவரேனும் இந்திய அரசாங்கத்துடன் இணக்கத்தில் அல்லது அமைதி உறவில் உள்ள ஏதாவதொரு நாட்டின் எல்லைப் பகுதிகளின் மீது கொள்ளையைப் புரிந்தால், அல்லது கொள்ளையைப் புரிவதற்க்கான முன்னேற்பாட்டைச் செய்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு மற்றும் அத்தகைய கொள்ளையைப் புரிவதில் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த எண்ணப்பட்ட அல்லது அத்தைகைய கொள்ளையில் பெறப்பட்ட ஏதாவதொரு சொத்தின் பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-127\nஎவரேனும் சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் ஏதாவதொன்றைப் புரிகையில் எடுக்கப்பட்டிருக்கின்ற ஏதாவதொரு சொத்தை அது அவ்வாறு எடுக்கப்பட்டதுதான் என தெரிந்தே பெற்றால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அவ்வாறாகப் பெறப்பட்ட சொத்தின் பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-128\nஒரு பொதுப் பணியாளராக இருக்கும், மற்றும் நாட்டின் யாரேனும் ஒரு கைதி அல்லது போர்க் கைதியின் பாதுகாப்பைக் கொண்டிருக்கும் எவரேனும், அத்தகைய கைதி எந்தஒரு இடத்தில் அடைத்து வாக்கப்பட்டிருக்கிறாரோ அந்த ஒரு இடத்திலிருந்து தப்பிப்பதற்கு அத்தகைய கைதியை தன்னிச்சையாக அனுமதித்தால் ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும் IPC-129\nஒரு பொதுப் பணியாளராக இருக்கும், மற்றும் நாட்டின் யாரேனும் ஒரு கைதி அல்லது போர்க் கைதியின் பாதுகாவலைக் கொண்டிருக்கும் எவரேனும், அத்தகைய கைதி எந்தஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாரோ, அந்தவொரு அடைப்பு இடத்திலிருந்து அத்தகைய கைதி தப்பிப்பதற்கு கவனக்குறைவாக அனுமதித்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-130\nஎவரேனும் நாட்டின் யாரேனும் ஒரு கைதி அல்லது போர்க் கைதி சட்டபூர்வ பாதுகாவலிலிருந்து தப்பிப்பதில் தெரிந்தே துணை புரிந்தால் அல்லது உதவினால் அல்லது யாரேனும் ஒரு அத்தகைய கைதியை மீட்டால் அல்லது மீட்பதற்கு முயன்றால், அல்லது சட்டபூர்வ பாதுகாவலிலிருந்து எந்தவொரு அத்தகைய கைதி தப்பித்திருக்கிறாரோ, அந்த கைதிக்கு புகலிடமளித்தால் அல்லது மறைத்தால் அல்லது அத்தகைய கைதியை திரும்ப பிடிப்பதற்கு ஏதாவதொரு எதிர்ப்பை அளித்தால் அல்லது அளிக்கமுயன்றால், ஆயுள் சிறைத் தண்டனையுடன், அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கும் உள்ளாக்கப்படவும் வேண்டும். விளக்கம் :-நாட்டின் ஒரு கைதி அல்லது போர்க் கைதி, இந்தியாவின் குறிப்பிட்ட பகுதியில் சுதந்திரமாயிருக்க அவரின் நிபந்தனை விடுப்பில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது எந்தவொரு பகுதியில் சுதந்திரமாயிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறாரோ, அந்த பகுதிக்கு வெளியே அவர் சென்றால், சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து அவர் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுவார். IPC-131\nஎவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால் கலகம் புரியப்படுவதற்குத் தூண்டினால், அல்லது யாரேனும் ஒரு அத்தகைய அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரை அவரின் விசுவாசத்திலிருந்து அல்லது அவரின் கடமையிலிருந்து கீழ்ப்படியாமைக்கு இசையச் செய்ய முயன்றால் ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். விளக்கம்:-இச்சட்டப் பிரிவில், "அலுவலர்", "தரைப்படை வீரர்", "கடற்படை வீரர்" மற்றும் " விமானப்படை வீரர்" என்ற வார்தைகளானது, தரைப்படை சட்டம், தரைப்படைச் சட்டம், 1950(46/1950), கடற்படை ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய கடற்படை (ஒழுங்குமுறைச்சட்டம்), 1934(34/1934), விமானப்படைச் சட்டம் அல்லது விமானப்படை சட்டம், 1950(45/1950) ஆகியவற்றிற்கு உட்பட்ட, அது எதுவாக இருப்பினும்,, யாரேனும் ஒரு நபரை உள்ளடக்குகிறது. IPC-132\nஎவரேனும், இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப் படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால் கலகம் புரியப்படத் தூண்டி, அத்தூண்டுதலின் விளைவில் கலகம் புரியப்பட்டால், மரண தண்டனையுடன் அல்லது ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-133\nஎவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால், யாரேனும் ஒரு மேனிலை அலுவலரின் மீது அவரின் அலுவலக பணியாற்றும் போது ஒரு தாக்குதலைத் தூண்டினால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-134\nஎவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால் யாரேனும் ஒரு மேனிலை அலுவலரின் மீது அவன் அலுவலகப் பணியாற்றும்போது ஒருத்தாக்குதலைத் தூண்டி, அத்தூண்டுதலின் விளைவில் அத்தகைய தாக்குதல் புரியப்பட்டால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-135\nஎவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் யாரேனும் ஒரு அலுவலர், தரைப் படைவீரர் கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரின் பணியை விட்டோடுதலைத் தூண்டினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவொதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-136\nஎவரேனும் இதன்பின்னர் விலக்கமளிக்கப்பட்டுள்ள அவ்வாறானதைத் தவிர, இந்திய அரசங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப் படைவீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடிவிட்டார் என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமையிருக்கும் போது, அத்தகைய அலுவலர் தரைப் படைவீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரருக்குப் புகலிடமளித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விலக்கு :-எந்தஒரு நேர்வில் ஒரு மனைவியால், அவளின் கணவருக்குப் புகலிடமளிக்கப்பட்டதோ, அந்தவொரு நேர்வில் இந்த ஷரத்து நீட்டிக்கப்படாது. IPC-137\nஎந்தவொரு வணிகக் கப்பலில், இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்ப் படை அல்லது விமானப்படையிலிருந்து யாரேனும் ஒரு பணியை விட்டோடியவர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாரோ, அந்தவொரு வணிக கப்பலின் தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருக்கும் நபர், அத்தகைய மறைத்து வைத்தலைப் பற்றி அறியாமலிருந்தால் கூட, அத்தகைய தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருக்கும் நபர், அவரது கடைமையில் கவனக்குறைவாக இல்லாமலிருந்தால், அல்லது அக்கப்பலின் கட்டுப்பாடுகள் குறைவில்லாமல் இருந்திருந்தால், அத்தகைய மறைத்து வைத்திருத்தல் அவரது கவனத்திற்குத் தெரியவந்திருக்குமென்று உள்ளபோது, ரூபாய் ஐநூறுக்கு மிகாத அபராதத் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். IPC-138\nஎவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப் படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரின் கீழ்ப்படியாமையிலான ஒரு செயல் என்று அவருக்குத் தெரிந்த எதையும் தூண்டி, அந்த தூண்டுதலின் விளைவில் அத்தகைய கீழ்ப்படியாமை செயல் புரியப்பட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படகூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-139\nதரைப்படை சட்டம், தரைப்படை சட்டம், 1950(46/1950) அல்லது கடற்படை ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய கடற்படை(ஒழுங்குமுறைச்) சட்டம், 1934(34/1934) விமானப்படைச் சட்டம், விமானப்படைச் சட்டம், 1950(45/1950), ஆகியவற்றிற்கு உட்பட்ட எந்த நபரும், இந்த அத்தியாயத்தில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றங்களில் ஏதாவதொன்றிற்காக, இச்சட்டத்தின்கீழ் தண்டனைக்கு உள்ளாகமாட்டார். IPC-140\nஎவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப் படை பணியிலுள்ள ஒரு தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படைவீரராக இல்லாத போது, அவர் அத்தகைய ஒரு தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரர் என்று நம்பவைக்கும் உள்நோக்கத்துடன், அத்தகைய ஒரு தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரர் பயன்படுத்துகிற ஏதாவதொரு சீருடையை அணிந்தால் அல்லது ஏதாவதொரு சின்னத்தை கொண்டு சென்றால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப் படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப் படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Popular posts from this blog

Constitution Of India app Privacy Policy

NDPS ACT Tamil app Privacy Policy

Tamil BNS Privacy Policy