Posts

Showing posts from August, 2023

இந்திய தண்டனை சட்டம் பிரிவு- 321-340

Image
IPC-321\nஒருவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது செயலால் அத் IPC-341\nஎந்த நபரையும் முறையற்றுத் தடுப்பது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ஒரு மாதம் வரை வெறுங்காவல் அல்லது 500 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். IPC-342\nஇந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். IPC-343\nமூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான சிறைவாசம்.- யாரேனும் ஒரு நபரை மூன்று நாட்கள் அல்லது அதற்கும் மேலாக தவறாக அடைத்து வைத்தால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு விளக்கத்தின் சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். IPC-344\nபத்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான சிறைவாசம்.-ஒரு நபரை பத்து நாட்கள் அல்லது அதற்கு மேல் தவறாக அடைத்து வைத்தால், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு விளக்கத்தின் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார், மேலும் அபராதமும் விதிக்கப்படும். IPC-345\nயாருடைய ...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 321-340

Image
தகைய யாருக்காவது காயம் ஏற்பட்டால், அதனைத் தன்னிச்சையாகக் காயப்படுத்துதல் என்று கூறப்படும். IPC-322\nகொடுங்காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது செயலால் அப்படிக் கொடுங்காயம் ஏற்படும் என்ற தெளிவுடன் தன்னிச்சையாக காயப்படுத்தும் செயலால் யாருக்காவது கொடுங்காயம் ஏற்பட்டால் அதனைத் தன்னிச்சையாகக் கொடுங்காயப்படுத்துதல் என்று கூறப்படும். IPC-323\nதன்னிச்சையாகக் காயப்படுத்தும் செயலை யார் புரிந்தாலும் ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (334 - ஆவது பிரிவின்படி இந்த செயல் புரியப்பட்டிருந்தால் இந்தப்பிரிவு பொருந்தாது). IPC-324\nதுப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை விஷம், வெடி மருந்து, துருப்பிடிக்கச் செய்யும் பொருட்கள், இன்னும் மனிதர்களுடைய சுவாசத்தில், உள்ளுறுப்புகளில் அல்லது ரத்தத்தில் கலப்பதன் மூலம் அத்தகைய அபாயத்தை உண்டாக்கக்கூடும் மிருகத்தாலு...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 281 - 300

Image
IPC-281\nஎவரேனும், ஏதாவதொரு பொய்யான ஒளிப் பாய்ச்சல், அடையாளக்குறி அல்லது மிதவையை பார்வையில் படும்படி வைத்து, அத்தகைய பார்வையில் படும்படி வைத்தல் யாரேனும் ஒரு நீர்வழிக்கலகம் ஓட்டுபவரை அது அநேகமாக திசை திருப்பச் செய்யலாம் என்ற உள்நோக்கத்தில் அல்லது தெரிந்தே வைத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-282\nஎவரேனும், யாரேனும் ஒரு நபரை, ஏதாவதொரு நீர்வழிக்கலத்தின் மூலம் தண்ணீரைக் கடக்க, அத்தகைய ஒரு தன்மை அல்லது அளவுக்கதிகமான சுமை கொண்டதாக அந்நீர்வழிக்கலம் இருக்கும்போது, அதிலுள்ள அந்நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென்று தெரிந்தே அல்லது கவனக்குறைவாக, வாடகைக்காக ஏற்றிச் சென்றால் அல்லது ஏற்றிச் செல்ல வைத்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-283\nஎவரேனும், ஏதாவதொரு செயலைச் செய்வதனால், ...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 301 - 320

Image
IPC-301\nஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது மரணம் உண்டாகும் என்று தெரிந்து ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலின் விளைவாக வேறு ஒருவருக்கு மரணம் சம்பவிக்கிறது. அனால் காரியத்தை செய்தவருக்கு இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நபரை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தோ அல்லது தன செயலால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவோ இல்லை. ஆகவே, அவர் மீது கொலைக்குற்றம் சாராது. எண்ணியதற்கு மாறாக வேறு ஒரு நபர் மரணமடைந்தால் யாரைக்குறித்து செயல்பட்டாரோ, அதற்காகவே மரணம் விளைவித்த குற்றம் அவரைச்சாரும். IPC-302\nகொலைக்குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். IPC-303\nஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் கைதி கொலைக்குற்றம் புரிந்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். IPC-304\nகொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 241 - 260

Image
IPC-241\nஎவரேனும், ஏதாவதொரு போலியான நாணயத்தை, அது போலியானதுதான் என அவருக்குத் தெரிந்தே, ஆனால், அதை அவர் தனது உடைமையில் எடுத்துக்கொண்ட காலத்தின்போது அது போலியான நாணயம் என அவருக்கு தெரியாதிருந்து அதை உண்மையானது என்று யாரேனும் ஒரு பிற நபருக்குக் கொடுத்தால் அல்லது யாரேனும் ஒரு பிற நபரை உண்மையானதுபோன்று அதைப் பெற்று கொள்ள தூண்டிவிட முயன்றால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட நாணயத்தின் மதிப்பில் பத்து மடங்குகள் வரை நீட்டிக்கப்படகூடிய ஒரு தொகைக்கான அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்ற நாணயத் தயாரிப்பாளர், B என்ற தனது கூட்டாளிக் குற்றவாளிக்கு போலியான கம்பெனி ரூபாய்களை அவற்றை செலவாணியாக பரப்பும் நோக்கில் கொடுக்கிறார்.செலவாணியாகப் பரப்பும் மற்றொரு நபரான C என்பவருக்கு, B அதை விற்கிறார்.C அதைப் போலியானது என தெரிந்தே வாங்குகிறார்.C அந்த போலியான ரூபாய்களை சரக்கு வாங்குவதின் நிமித்தம் அதை Dஇடம் கொடுக்கிறார்;D அதைப் போலியான நாணயம் என தெரியாமலேயே வாங்கிக் ...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு-261 - 280

Image
IPC-261\nஎவரேனும் மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரை பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ஏதாவதொரு எழுத்துரு அல்லது ஆவணத்திலுள்ள அத்தகைய முத்திரையைக் கொண்டிருக்கின்ற ஏதாவதொரு பொருளிலிருந்து அகற்றினால் அல்லது மறைத்தால், அல்லது ஏதாவதொரு எழுத்துரு அல்லது ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு முத்திரை, அத்தகைய எழுத்துரு அல்லது ஆவணத்திலிருந்து, ஒரு வேறுபட்ட எழுத்துருவில் அல்லது ஆவணத்தில் அத்தகைய முத்திரை பயன்படுத்தப்படலாம் என்பதன் பொருட்டு அகற்றினால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-262\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு முத்திரையை முன்னரே பயன்படுத்தப்பட்டுவிட்டது என அவருக்குத் தெரிந்தே மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே ஏதாவதொரு நோக்கத்திற்காக உள்நோக்கத்துடன் பயன்படுத்தினால், இரண்டு வ...

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 201 - 220

Image
IPC-201\nஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக் குற்றம் பற்றிய சாட்சியத்தை குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைபெற்ற குற்றத்தை பற்றிய பொய்யான தகவலைத் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால், அப்படிச் செய்தவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறத்தக்க குற்றம் நடை பெற்றிருந்தால் அந்தக் குற்றத்திற்கு விதிக்கத்தக்க தண்டனையில் நான்கில் ஒரு பங்கைச் சிறைக்காவலாகவும் அல்லது அபாரதமாகவும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைக்க குற்றத்தின் சாட்சியத்தை காணாமல்போகச் செய்தல் அல்லது பொய்யான தகவலை அளித்தல் எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கிறது என்று தெரிந்த...