இந்திய தண்டனை சட்டம் பிரிவு 241 - 260

IPC-241\nஎவரேனும், ஏதாவதொரு போலியான நாணயத்தை, அது போலியானதுதான் என அவருக்குத் தெரிந்தே, ஆனால், அதை அவர் தனது உடைமையில் எடுத்துக்கொண்ட காலத்தின்போது அது போலியான நாணயம் என அவருக்கு தெரியாதிருந்து அதை உண்மையானது என்று யாரேனும் ஒரு பிற நபருக்குக் கொடுத்தால் அல்லது யாரேனும் ஒரு பிற நபரை உண்மையானதுபோன்று அதைப் பெற்று கொள்ள தூண்டிவிட முயன்றால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட நாணயத்தின் மதிப்பில் பத்து மடங்குகள் வரை நீட்டிக்கப்படகூடிய ஒரு தொகைக்கான அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்ற நாணயத் தயாரிப்பாளர், B என்ற தனது கூட்டாளிக் குற்றவாளிக்கு போலியான கம்பெனி ரூபாய்களை அவற்றை செலவாணியாக பரப்பும் நோக்கில் கொடுக்கிறார்.செலவாணியாகப் பரப்பும் மற்றொரு நபரான C என்பவருக்கு, B அதை விற்கிறார்.C அதைப் போலியானது என தெரிந்தே வாங்குகிறார்.C அந்த போலியான ரூபாய்களை சரக்கு வாங்குவதின் நிமித்தம் அதை Dஇடம் கொடுக்கிறார்;D அதைப் போலியான நாணயம் என தெரியாமலேயே வாங்கிக் கொள்கிறார் மற்றும் பின்பு அவைகளை போலியானதென கண்டுபிடித்த பின்பும, D அவைகளை, உண்மையானதுபோன்று பட்டுவாடா செய்கிறார், இங்கு இச்சட்டப்பிரிவின் படி மட்டுமே தண்டனைக்குள்ளாவார்.ஆனால் B மற்றும் C ஆகியோர்கள் சட்டப்பிரிவு 239 அல்லது 240 கீழ், அது எதுவாக இருப்பினும் தண்டனைக்குள்ளாவார்கள். IPC-242\nஎவரேனும், அவரின் உடைமையில் வந்ததிலிருந்து போலியான நாணயம் என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாம் என்ற உள்நோக்கத்துடன், அத்தகைய போலியான நாணயத்தை உடைமையில் வைத்திருந்தால், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-243\nஎவரேனும், அவரின் உடைமையில் வந்ததிலிருந்து ஒரு போலியான இந்திய நாணயம் என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாம் என்ற உள்நோக்கத்துடன் அதைத் தனது உடைமையில் வைத்திருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-244\nஎவரேனும், இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பட்ட ஏதாவதொரு நாணய தொழிற்சாலையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளபோது, உள்நோக்கத்துடன், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட எடை அல்லது அமைப்பு முறையிலிருந்து ஒரு வேறுபட்ட எடை அல்லது அமைப்பு முறையில் உள்ள ஏதாவதொரு நாணயம் அத்தொழிற்சாலையில் இருந்து வெளிவர ஏதாவதொரு செயலைச் செய்தால், அல்லது சட்டப்படி செய்ய கடமைப்பட்ட ஒன்றை செய்யாமல் விட்டுவிட்டால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-245\nஎவரேனும் இந்தியாவில் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஏதாவதொரு நாணயத் தொழிற்சாலையிலிருந்து, சட்டப்படியான அதிகாரமின்றி, ஏதாவதொரு நாணயம் தயாரிக்கும் கருவி அல்லது சாதனத்தை வெளியே எடுத்து சென்றால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-246\nஎவரேனும், ஏதாவதொரு நாணயத்தின் மீது, அந்நாணயத்தின் எடையைக் குறைக்கும் அல்லது அதன் அமைப்பு முறையை மாற்றியமைக்கும் ஏதாவதொரு செய்முறையை மோசடியாக அல்லது நேர்மையின்றிச் செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். விளக்கம்:-ஒரு நபர் நாணயத்தின் பகுதியில் தோண்டி குழியாக்கி, அக்குழியில் ஏதாவதொன்றை வைத்தால், அவர் அந்நாணயத்தின் அமைப்பு முறையை மாற்றுகிறார். IPC-247\nஎவரேனும், ஏதாவதொரு இந்திய நாணயத்தின் மீது அதன் எடையைக் குறைக்கும் அல்லது அமைப்பு முறையை மாற்றியமைக்கும் ஏதாவதொரு செய்முறையை, மோசடியாக அல்லது நேர்மையின்றிச் செய்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-248\nஎவரேனும், ஏதாவதொரு நாணயத்தின் மீது ஏதாவதொரு செயல்முறையச் செய்து, ஒரு நாணயத்தை, அது வேறு விவரிப்பில் கூறப்பட்ட நாணயம்போல் அனுமதிக்கப்பட்ட அந்நாணயத்தின் தோற்றத்தை உள்நோக்கத்துடன் மாற்றியமைத்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-249\nஎவரேனும் ஏதாவதொரு இந்திய நாணயத்தின் மீது ஏதாவதொரு செயல்முறையைச் செய்து, ஒரு நாணயத்தை அது வேறு விவரிப்பில் கூறப்பட்ட நாணயம்போல் அனுமதிக்கப்பட்ட, அந்நாணயத்தின் தோற்றத்தை உள்நோக்கத்துடன் மாற்றியமைத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-250\nஎவரேனும், அவரின் உடமையிலுள்ள எந்த நாணயத்தின் பொருட்டு சட்டப்பிரிவு 246 அல்லது 248இல் வரையறுக்கப்பட்டுள்ள குற்றம் புரியப்பட்டுள்ளதோ அதை அவரிடம் வைத்திருந்து மற்றும் அத்தகைய நாணயம் அவரது உடமைக்கு வந்த நேரத்திலேயே அதன்பொருட்டு அத்தகைய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாமென்ற உள்நோக்கத்துடன் அத்தகைய நாணயத்தை யாரேனும் ஒரு பிற நபரிடம் விநியோகித்தால், அல்லது யாரேனும் ஒரு பிற நபரை அதைப் பெறும்படி தூண்ட முயன்றால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-251\nஎவரேனும், அவரின் உடமையிலுள்ள எந்த நாணயத்தின் பொருட்டு சட்டப்பிரிவு 247 அல்லது 249 இல் வரையறுக்கப்பட்டுள்ள குற்றம் புரியப்பட்டுள்ளதோ அதை அவரிடம் வைத்திருந்து மற்றும் அத்தகைய நாணயம் அவரது உடைமைக்கு வந்த நேரத்திலேயே அதன் பொருட்டு அத்தகைய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாமென்ற உள்நோக்கத்துடன் அத்தகைய நாணயத்தை யாரேனும் ஒரு பிற நபரிடம் விநியோகித்தால் அல்லது யாரேனும் ஒரு பிற நபரை அதைப் பெறும்படி தூண்ட முயன்றால், பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-252\nஎவரேனும், நாணயத்தின் பொருட்டு உட்ப்பிரிவு 246 அல்லது 248ஆகிய ஏதாவதொன்றில் விவரிக்கப்பட்டுள்ள குற்றம் புரியப்பட்டுள்ளதை உடமையில் வைத்திருந்து, உடமைக்கு வந்த நேரத்திலேயே அத்தகைய நாணயத்தின் பொருட்டு அத்தகைய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாமென்ற உள்நோக்கத்துடன் வைத்திருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-253\nஎவரேனும், நாணயத்தின் பொருட்டு சட்டப்பிரிவு 247 அல்லது 249 ஆகிய ஏதாவதொன்றில் விவரிக்கப்பட்டுள்ள குற்றம் புரியப்பட்டுள்ளதை உடமையில் வைத்திருந்து, உடமைக்கு வந்த நேரத்திலேயே அத்தகைய நாணயத்தின் பொருட்டு அத்தகைய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாமென்ற உள்நோக்கத்துடன் வைத்திருந்தால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-254\nஎவரேனும், சட்டப்பிரிவு 246, 247, 248 அல்லது 249 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய செயல்முறை ஏதாவதொரு நாணயம் குறித்துச் செய்யப்பட்டுள்ளது என அவருக்கு தெரிந்தே, ஆனால் அவருடைய உடமைக்கு வந்த போதே அதனின் பொருட்டு அத்தகைய செயல்முறை செய்யப்பட்டுள்ளது என அவருக்கே தெரியாமல், உண்மையானது என்றோ அல்லது அது முந்தையதிலிருந்து ஒரு வேறுபட்ட விவரிப்புக் கொண்ட ஒரு நாணயம் என்றோ, அல்லது முந்தையதிலிருந்து மாறுபட்ட வேறு விவரிப்பைக் கொண்ட உண்மையான அல்லது வேறுபட்ட நாணயம் என யாரேனும் ஒரு நபர் பெற்றுக்கொள்ள தூண்ட முயன்று, யாரேனும் ஒரு பிற நபருக்குக் கொடுத்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது மாற்றியமைக்கப்பட்ட நாணயம் அனுமதிக்கப்பட்ட அல்லது அனுமதிக்க முயற்சிக்கப்பட்ட ஒரு தொகையின் மதிப்பில் பத்து மடங்கு அளவிலான அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-255\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையை போலியாகத் தயாரித்தால் அல்லது போலியாகத் தயாரிக்கும் செய்முறையின் ஏதாவதொரு பகுதியைத் தெரிந்தே செய்தால், ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். விளக்கம்:- ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள ஒரு உண்மையான முத்திரையை, வேறொரு மதிப்புள்ள ஒரு உண்மையான முத்திரையாகத் தோன்றும்படி போலியாகத் தயாரிக்கும் ஒரு நபர் இக்குற்றத்தைப் புரிகிறார். IPC-256\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையை, போலியாகத் தயாரிக்கும் நோக்கத்திற்காக, ஏதாவதொரு உபகரணத்தை அல்லது பொருளை பயன்படுத்தும் நோக்கத்திற்காக, அல்லது அது பயன்படுத்த எண்ணப்பட்டுள்ளது என தெரிந்தே அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது அவரின் உடமையில் வைத்திருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-257\nஎவரேனும் வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையை, போலியாகத் தயாரிக்கும் நோக்கத்திற்காக ஏதாவதொரு உபகரணத்தை அல்லது பொருளை பயன்படுத்தும் நோக்கத்திற்காக அல்லது அது பயன்படுத்த எண்ணப்பட்டுள்ளது என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, தயாரித்தால் அல்லது தயாரிப்பு செய்முறையின் ஏதாவதொரு பகுதியை செய்தால், அல்லது வாங்கினால் அல்லது விற்றால், அல்லது கொடுத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-258\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ஏதாவதொரு முத்திரையின், ஒரு போலியானது என அவருக்கு தெரிந்த அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும் ஏதாவதொரு முத்திரையை விற்றால், அல்லது விற்பதற்குக் கொடுத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-259\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையின் ஒரு போலியானது என அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு முத்திரையை, ஒரு உண்மையான முத்திரைபோன்று அதைப் பயன்படுத்தும், அல்லது விற்றுவிடும் உள்நோக்கத்தில் அல்லது அது ஒரு உண்மையான முத்திரையாகப் பயன்படுத்தலாம் என்பதன் பொருட்டு, அதை அவரின் உடமையில் வைத்திருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன்தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். IPC-260\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையை, அது போலியானது என தெரிந்தே ஏதாவதொரு முத்திரையை உண்மையானது போன்று பயன்படுத்தினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்