இந்திய தண்டனை சட்டம் பிரிவு 281 - 300

IPC-281\nஎவரேனும், ஏதாவதொரு பொய்யான ஒளிப் பாய்ச்சல், அடையாளக்குறி அல்லது மிதவையை பார்வையில் படும்படி வைத்து, அத்தகைய பார்வையில் படும்படி வைத்தல் யாரேனும் ஒரு நீர்வழிக்கலகம் ஓட்டுபவரை அது அநேகமாக திசை திருப்பச் செய்யலாம் என்ற உள்நோக்கத்தில் அல்லது தெரிந்தே வைத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-282\nஎவரேனும், யாரேனும் ஒரு நபரை, ஏதாவதொரு நீர்வழிக்கலத்தின் மூலம் தண்ணீரைக் கடக்க, அத்தகைய ஒரு தன்மை அல்லது அளவுக்கதிகமான சுமை கொண்டதாக அந்நீர்வழிக்கலம் இருக்கும்போது, அதிலுள்ள அந்நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமென்று தெரிந்தே அல்லது கவனக்குறைவாக, வாடகைக்காக ஏற்றிச் சென்றால் அல்லது ஏற்றிச் செல்ல வைத்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-283\nஎவரேனும், ஏதாவதொரு செயலைச் செய்வதனால், அல்லது அவரது உடமையில் அல்லது அவரது பொறுப்பிலுள்ள ஏதாவதொரு சொத்தை ஒழுங்குபடுத்தாமல் விடுதலினால், ஏதாவதொரு பொதுப்பாதையில் அல்லது பொதுநீர்வழிப் பாதையில் யாரேனும் ஒரு நபருக்கு அபாயம் அல்லது தீங்கை விளைவித்தால், ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-284\nஎவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கிற, அல்லது யாரேனும் ஒரு நபருக்கு அநேகமாக காயம் அல்லது தீங்கு விளைவிக்கக்கூடுமென்ற ஏதாவதொரு செயலை, ஏதாவதொரு நஞ்சுப்பொருளின் பொருட்டு அதிவிரைவான அல்லது கவனக்குறைவான ஒரு முறையில் செய்தால், அல்லது அவரது உடமையிலிருக்கும் ஏதாவதொரு நஞ்சுப்பொருள் சம்பந்தமாக, அத்தகைய நச்சுப்பொருள் மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால், ஆறு மாதங்கள் வரை, நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-285\nஎவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கிற, அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாமென்ற தீ அல்லது ஏதாவதொரு தீப்பற்றக்கூடிய பொருள் சம்பந்தமாக, அத்தகைய தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருள் மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால், ஆறுமாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும் IPC-286\nஎவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில், அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்குக் காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாமென்ற ஏதாவதொரு வெடிபொருள் சம்பந்தமான ஏதாவதொரு செயலை அதிவிரைவாக அல்லது கவனக்குறைவாக செய்தால், அல்லது அவரது உடமையிலிருக்கும் ஏதாவதொரு வெடிபொருள் சம்பந்தமாக, அந்த வெடிபொருள் மனித உயிருக்கு ஏதாவதொரு அபாயம் விளைவிக்கலாமென்பதற்கு எதிராக போதிய ஏற்பாடுகள் செய்து அத்தகைய ஒழுங்குபடுத்துவதை தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால், ஆறு மாதங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-287\nஎவரேனும் மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாமென்ற ஏதாவதொரு இயந்திரம் சம்பந்தமான ஏதாவதொரு செயலை அதிவிரைவாக அல்லது கவனக்குறைவாக செய்தால், அல்லது அவரது உடமையிலிருக்கும் ஏதாவதொரு இயந்திரம் சம்பந்தமாக, அத்தகைய இயந்திரம் மனித உயிருக்கு ஏதாவதொரு அபாயம் விளைவிக்கலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அத்தகைய ஒழுங்குபடுத்துவதை தெரிந்தே அல்லது கவனக்குறைவாகச் செய்யாமல் விட்டுவிட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-288\nஎவரேனும், ஏதாவதொரு கட்டிடத்தை இடிக்கும்போது அல்லது பழுதுபார்க்கும்போது அக்கட்டிடம் அல்லது அதன் ஏதாவதொரு பகுதி இடிந்து விழுந்து, அதனால் மனித உயிருக்கு ஏதாவதொரு அபாயம் விளைவிக்கப்படலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-289\nஎவரேனும், ஏதாவதொரு விலங்கை அவரது உடமையில் வைத்திருக்கும்போது, அத்தகைய விலங்கினால் மனித உயிருக்கு ஏதாவதொரு ஆபத்து விளைவிக்கப்படக்கூடும், அல்லது கொடுங்காயம் விளைவிக்கப்படலாமென்ற ஏதாவதொரு ஆபத்திற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-290\nஎவரேனும், இத்தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத ஏதாவதொரு பிற வழக்கில், ஒரு பொதுத் தொல்லையைப் புரிந்தால், ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-291\nஎவரேனும், ஒரு பொதுத் தொல்லையை மீண்டும் புரியக்கூடாது அல்லது தொடரக்கூடாது என சட்டப்படியான அதிகார அமைப்பின்படி உறுத்துக் கட்டளையிட அதிகாரம் படைத்த யாரேனும் ஒரு பொதுப்பணியாளரால் அத்தகைய கட்டளையிடப்படும், அத்தகைய பொதுத் தொல்லையை மீண்டும் அல்லது தொடர்ந்து புரிந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-292\n1) சட்ட உட்பிரிவு\n(2) இன் நோக்கங்களுக்காக, ஒரு நூல், துண்டுப் பிரசுரம், செய்தித்தாள், எழுத்துரு, சித்திரம், ஓவியம், வெளிப்படுத்தல், வரைபடம் அல்லது ஏதாவதொரு பிற பொருள், காம உணர்ச்சியைத் தூண்டுவதாக அல்லது காம இச்சைகளை ஈர்ப்பதாக அல்லது(அதனது விளைவை அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறான இனங்களைக் கொண்டிருந்தால்)அவற்றின் ஏதாவதொரு இனத்தின் விளைவை, அதன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளும் ஒரு முழுவதுமாக கவனத்தில் கொள்ளப்படும்போது, அதில் அடங்கியுள்ள அல்லது பொருந்தியுள்ள விஷயத்தை அநேகமாக படிக்க, பார்க்க அல்லது கேட்க நேர்ந்தால், அது நபரின் ஒழுக்கத்தைக் கொடுக்கும் அல்லது நெறி பிறழச் செய்யும் அத்தகைய வகையில் இருக்குமானால், அது ஆபாசமானது என்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.\n(2)எவரேனும்- (a )ஏதாவதொரு ஆபாச நூலை, துண்டுப் பிரசுரத்தை, செய்தித்தாளை, சித்திரத்தை, ஓவியத்தை வெளிப்படுத்தலை அல்லது வரைபடத்தை அல்லது ஏதாவதொரு பிற ஆபாச பொருளை விற்றால், வாடகைக்கு விட்டால், விநியோகித்தால், பொது இடத்தில் பார்வைக்கு வைத்தால் அல்லது அதை விற்க, வாடகைக்கு விட ஏதாவதொரு முறையில் சுற்றுக்கு விட, பொது இடத்தில் பார்வைக்கு வைக்க அல்லது சுற்றுக்கு விடும் நோக்கங்களுக்காக செய்தால், தயாரித்தால் அல்லது அவரின் உடமையில் வைத்திருந்தால் அல்லது\n(b )மேற்கூறப்பட்டுள்ள நோக்கங்களில் ஏதாவதொன்றிற்காக அல்லது ஏதாவதொரு ஆபாசப்பொருள் விற்கப்பட, வாடகைக்கு விடப்பட, விநியோகிக்கப்பட அல்லது பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட அல்லது ஏதாவதொரு முறையில் சுற்றுக்கு விடப்படலாமென்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும் போது அத்தகைய பொருளை இறக்குமதி செய்தால், ஏற்றுமதி செய்தால் அல்லது எடுத்து சென்றால் அல்லது\n(c )ஏதாவது அத்தகைய ஆபாசப் பொருட்கள், மேற்கூறப்பட்டுள்ள நோக்கங்களில் ஏதாவதொன்றிற்காக உள்ளவை, செய்யப்பட்டுள்ளன, தயாரிக்கப்பட்டுள்ளன, வாங்கப்பட்டுள்ளன, வைக்கப்பட்டுள்ளன, இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன, எடுத்து செல்லப்பட்டன, பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அல்லது ஏதாவதொரு முறையில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன என்று ஏதாவதொரு வியாபாரத்தின் போக்கில் அவருக்குத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கும்போது அதில் பங்கு கொண்டால் அல்லது அதனினின்று இலாபத்தைப் பெற்றால், அல்லது\n(d )இச்சட்டப்பிரிவின் கீழ் ஒரு குற்றமாகின்ற ஏதாவதொரு செயலில், யாரேனும் ஒரு நபர் ஈடுபட்டிருக்கின்றார் அல்லது ஈடுபட தயாராகயிருக்கின்றார் என்று அல்லது யாரேனும் ஒரு நபரிடமிருந்து அல்லது நபர் மூலமாக ஏதாவதொரு அத்தகைய ஆபாசப் பொருளைப் பெறலாமென்று விளம்பரப்படுத்தினால் அல்லது ஏதாவதொரு முறையில் எந்த வழியிலும் தெரியப்படுத்தினால், அல்லது\n(e) இச்சட்டப்பிரிவின் கீழ் ஒரு குற்றமாகின்ற ஏதாவதொரு செயலைச் செய்ய முனைந்தால் அல்லது முயன்றால், முதல் தண்டிப்பில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், மற்றும் ரூபாய் இரண்டாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் மற்றும் இரண்டாவது அல்லது அதற்கு பிந்தைய தண்டிப்பில், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு சிறைத்தண்டனையுடன், மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடனும் தண்டிக்கப்பட வேண்டும்.\nவிதிவிலக்கு:-இச்சட்டப்பிரிவு பின்வருவனபவைகளுக்கு நீடிக்காது\n(a ).ஏதாவதொரு நூல், துண்டுப் பிரசுரம், செய்தித்தாள், எழுத்துரு, சித்திரம், ஓவியம், வெளிப்படுத்தல் அல்லது வரைபடம்\n(i )அத்தகைய நூல், துண்டுப் பிரசுரம், செய்தித்தாள், எழுத்துரு, சித்திரம், ஓவியம், வெளிப்படுத்தல் அல்லது வரைபடம் ஆகியவற்றின் வெளியீடு அறிவியல், இலக்கியம், கலை அல்லது கற்றல் அல்லது பிற பொது நோக்கங்கள் சம்பந்தமாக, பொது நன்மைக்கான நியாயமானதுதான் என நிரூபிக்கப்பட்டால் அல்லது\n(ii )மத நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருந்தால் அல்லது நல்லெண்ணத்தில் பயன்படுத்தப்பட்டால், (b )செதுக்கப்பட்ட, பதிக்கப்பட்ட, வர்ணம் செய்யப்பட்ட அல்லது பிறவகையில் பின்வருவனவற்றின் மேல் அல்லது அதனில் தெரியப்படுத்தப்பட்ட ஏதாவதொரு வெளிப்படுத்தல்- (i )தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் அழியாப் பகுதிகள் சட்டம், 1958(24/1958)இன் பொருளின்படியான ஏதாவதொரு தொன்மையான சின்னம் அல்லது (ii )ஏதாவதொரு கோவில், அல்லது விக்கிரகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஏதாவதொரு இரதம், அல்லது ஏதாவதொரு மத நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் அல்லது பயன்படுத்தப்படுபவை. தமிழ்நாடு மாநில சட்டத்திருத்தம்:- சட்டப்பிரிவு 292 இல்"மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக பின்வருவனவற்றைப் பதிலீடு செய்ய வேண்டும் அதாவது:- "இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். இருப்பினும், இச்சட்டப்பிரிவின் கீழான, ஒரு இரண்டாவது அல்லது ஏதாவதொரு பிந்தைய தண்டிப்பில் அவர், ஆறு மாதங்களுக்குக் குறைவில்லாத மற்றும் இரண்டு வருடங்களுக்கு மிகாத ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும். [தமிழ்நாடு சட்டம் 25/1960 இன் சட்டப்பிரிவு 2ஐப் பார்க்கவும்.(அமலுக்கு வந்த நாள் 09.11.1960)] தமிழ்நாடு மாநில சட்டத்திருத்தம்:- சட்டப்பிரிவு 292க்குப் பின்பு, பின்வரும் சட்டப்பிரிவு செருகப்பட வேண்டும், அவையாவது:- 292A .மிக அருவருப்பான, அல்லது கீழ்த்தரமான விஷயத்தை அல்லது மிரட்டிப் பறிக்கும் உள்நோக்கத்திலான விஷயத்தை அச்சிடுதல் முதலியன IPC-293\nஇதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் கொள்ளத்தக்க ஆபாச பொருளை இருபது வயதுக்கு குறைந்தவர்களுக்கு விற்பதும், வாடகைக்கு கொடுப்பதும், வழங்குவதும், காட்டுவதும், அவர்கள் மத்தியில் புழங்கவிடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களை புரிவதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். ஆபாசமான புத்தகம், விளக்கம், படம், ஓவியம் பொருள் என்பனவற்றை குறிக்கும். மதசம்பந்தமான புத்தகம், வெளியீடு எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும் கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கி உள்ளவற்றிகும் இதில் அடங்காது. இளம் நபருக்கு ஆபாசப் பொருட்களை விற்றல், முதலியன எவரேனும் கடைசி முந்தைய சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய ஆபாசப்பொருளை இருபது வருடங்கள் வயதுக்குக் கீழான யாரேனும் ஒரு நபருக்கு விற்றால், வாடகைக்கு விட்டால், விநியோகித்தால், பார்வையில் வைத்தால் அல்லது சுற்றுக்கு விட்டால், அல்லது அவ்வாறு செய்ய முனைந்தால் அல்லது முயன்றால், முதல் தண்டிப்பில், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன் மற்றும் ரூபாய் இரண்டாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் மற்றும் ஒரு இரண்டாவது அல்லது பிந்தைய தண்டிப்பில் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடனும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம்:- சட்டப்பிரிவு 293 இல்:- (a )."கடைசி முந்தைய சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய ஆபாசப் பொருளை"என்ற வார்த்தைகளுக்கு மாற்றாக "சட்டப் பிரிவு 292இல் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய ஏதாவதொரு ஆபாசப் பொருள் அல்லது சட்டப்பிரிவு 292A இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு அத்தகைய செய்தித்தாள், பருவ இதழ் சுற்றறிக்கை, படம் அல்லது பிற அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட ஆவணம்" என்ற வார்த்தைகள், எண்கள் மற்றும் எழுத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும். (b )"ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய"என்ற வார்த்தைகளுக்கு மாற்றாக "மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய "என்ற வார்த்தைகள் பதிலீடு செய்யப்பட வேண்டும். (c )பக்க ஒரக் குறிப்பில், "ஆபாசப் பொருட்கள்" என்ற வார்த்தைகளுக்குப் பின்பு, "ஏதாவதொரு மிக அருவருப்பான அல்லது கீழ்த்தரமான மிரட்டிப் பறிக்கும் உள்நோக்கத்திலான விஷயம்"என்ற வார்த்தைகள் செருகப்பட வேண்டும். சட்டம் 25/1960 இன் சட்டப் பிரிவு 4ஐப் பார்க்கவும் IPC-294\nபிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்; இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். \nஆபாச செயல்கள் மற்றும் பாடல்கள் எவரேனும், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில்:-\n(a )ஏதாவதொரு பொது இடத்தில் ஏதாவதொரு ஆபாசச் செயலைச் செய்தால் அல்லது\n(b )ஏதாவதொரு பொது இடத்தில் அல்லது அதன் அருகில் ஏதாவதொரு ஆபாசமான பாடலை, நாட்டுப்புறப் பாடலை அல்லது வார்த்தைகளைப் பாடினால், உச்சரித்தால் அல்லது கூறினால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-295\nபிறருக்கு தொல்லை தரும் வகையில்: பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்; இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். ஆபாச செயல்கள் மற்றும் பாடல்கள் எவரேனும், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில்:-\n(a )ஏதாவதொரு பொது இடத்தில் ஏதாவதொரு ஆபாசச் செயலைச் செய்தால் அல்லது (b )ஏதாவதொரு பொது இடத்தில் அல்லது அதன் அருகில் ஏதாவதொரு ஆபாசமான பாடலை, நாட்டுப்புறப் பாடலை அல்லது வார்த்தைகளைப் பாடினால், உச்சரித்தால் அல்லது கூறினால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-296\nமத வழிபாட்டு முறைகள், அல்லது மதச் சடங்குகளில் சட்டப்பூர்வமாக ஈடுபடும் எந்தவொரு கூட்டத்திற்கும் தானாக முன்வந்து இடையூறு விளைவிப்பவர், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார். IPC-297\nபுதைக்கப்பட்ட இடங்கள் முதலியவற்றில் அத்துமீறி நுழைவது - யாரேனும் ஒருவரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன், அல்லது எந்த ஒரு நபரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், அல்லது எந்த நபரின் உணர்வுகளும் புண்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து, அல்லது மதம் வழிபாட்டுத் தலத்திலோ அல்லது கல்லறை இடத்திலோ அல்லது இறுதிச் சடங்குகளைச் செய்வதைத் தவிர வேறு எந்த இடத்திலோ அல்லது இறந்தவர்களின் அஸ்தியை வைப்பிலிடவோ அத்துமீறல் செய்தால், எந்த நபரும் இதனால் அவமதிக்கப்பட வாய்ப்புள்ளது. எந்தவொரு மனித சடலத்திற்கும் அவமதிப்பு, அல்லது இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற்காக கூடியிருக்கும் நபர்களுக்கு இடையூறு விளைவித்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். IPC-298\nஎந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல், வார்த்தைகள் போன்றவை.-எந்தவொரு நபரின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் வேண்டுமென்றே நோக்கத்துடன், எந்த வார்த்தையைச் சொன்னாலும் அல்லது அந்த நபரின் செவிகளில் ஏதேனும் ஒலியை உண்டாக்கினால் அல்லது அந்த நபர் அல்லது இடத்தின் பார்வையில் ஏதேனும் சைகை, அந்த நபரின் பார்வையில் உள்ள எந்தவொரு பொருளும், ஒரு வருடம் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். IPC-299\nமரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலைப் புரிதல் அல்லது மரணம் விளைவிக்கக் கூடிய உடல் காயத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியத்தைச் செய்தல் அல்லது தன்னுடைய செய்கையால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்தும் அந்த செயலை புரிதல் ஆகியவற்றால் மரணம் ஏற்பட்டால், அதனை மரணம் விளைவிக்கும் குற்றம் என்று கூறப்படுகிறது. உதாரணம்: 1. மொய்தீன், ஒரு பள்ளத்தைக் குச்சிகளை, சருகுகளை போட்டு மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் மூடி மறைக்கிறான். தன்னுடைய செயலால் மரணம் உண்டாகும் என்பதை மனதார அவன் அறிந்தும் இந்த காரியத்தைப் புரிகின்றான். பள்ளம் இருக்கிறது என்பதை அறியாத கோவிந்தன் நடந்து வரும்போது அந்தப் பள்ளத்தில் விழுந்து மரணம் அடைகிறான். இந்த மரணத்துக்கு மொய்தீன் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே மரணம் விளைவிக்கும் குற்றத்தை மொய்தீன் புரிந்தவனாகிறான். 2. ஒரு புதருக்குப் பின்னால் மூர்த்தி மறைந்திருக்கிறான் என்பது ராஜூவுக்குத் தெரியும். அனால் ராமனுக்கு அதைபற்றித் தெரியாது. மூர்த்திக்கு மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது இப்படிச் செய்தல் மூர்த்திக்கு மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்திருந்தும் ராஜு அந்தப் புதரை நோக்கிச் சுடும்படி ராமனைத் தூண்டுகிறான். ராமன் அப்படியே சுடுகிறான். குண்டு பட்டு மூர்த்தி மரணம் அடைகிறான். ராமன் குற்றமற்றவனாக இருக்கலாம். அனால் ராஜுவின் மீது மரணத்தை விளைவிக்கும் குற்றம் சாரும். விளக்கம் - 1: நோய்வாய்ப்பட்டு அல்லது இயலாமையால் அவதியுற்றுத் துன்பப்படுபவனுடைய உடலுக்கு காயம் உண்டாக்குவதன் மூலம், அவனுடைய சாவைத் துரிதப்படுத்துகின்றனர். அந்த நிலையில் அந்த நபர் அவனுக்கு மரணத்தை உண்டாக்கியதாகவே கருதப்படுவார். விளக்கம் - 2: உடல் காயத்தால் மரணம் உண்டாக்கினால் காயத்தை உண்டாக்கியவன் அந்த மரணத்தை விளைவித்ததாகக் கொள்ளப்படுவான். காயம்பட்டவுடன் மருத்துவ உதவியை நாடிச் சென்றிருந்தால் மரணம் விளைந்திருக்காது என்றாலும், மரணத்தின் பொறுப்பு அவனையே சாரும். விளக்கம் - 3: தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு மரணத்தை உண்டாக்குவது இந்தக் குற்றத்தில் வராது. அனால் குழந்தையின் உறுப்புகளில் ஏதாவது தாயின் கர்பப்பையிலிருந்து வெளியே வந்த பிறகு அத்தகைய மரணம் உண்டாக்கப்பட்டிருந்தால் அந்தச் செயல் குற்றமாகும். பிறந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்திருக்கலாம். அல்லது முழுமையாகப் பிறப்பதற்கேற்ப வாய்ப்பில்லாமல் இருக்கலாம். இருப்பினும் கர்பப்பையை விட்டு நீங்கியவுடன் மரணத்தை உண்டாகும் செயல் என்று இடம் பெறக்கூடாது. IPC-300\nமரணத்தை விளைவிக்கு குற்றத்திற்கும், கொலைக்குற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்த பிரிவில் காண்போம். மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை எப்பொழுது கொலைக் குற்றமாக கொள்ளலாம், எப்பொழுது கொள்ளக் கூடாது என்பதற்கு கீழே சில விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த விதி விலக்குகளுக்கு உட்பட்டு மற்ற சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை கொலைக் குற்றமாக கொள்ள வேண்டும். அப்படி கொலைக்குற்றமாகவே கொள்ளத்தக்க நிலைகள் என்னவென்றால், 1. மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலை புரிந்து அதன் விளைவாக மரணம் ஏற்பட்டிருந்தால் அல்லது 2. உடலில் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் ஒருவர் மரணமடையலாம் காயத்தை உண்டாக்கியவருக்கு தான் ஏற்படுத்தும் காயத்தால் அந்த நபருக்கு மரணம் உண்டாகும் என்று தெரியும். தெரிந்தும் அந்த காயத்தை கருத்துடன் உண்டாகுதல் அல்லது. 3. ஒருவருடைய உடலை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியம் செய்யப்படுகிறது அதனால் மரணம் விளைவிக்கின்றது அப்படி உண்டாக்க வேண்டும் என்று எண்ணிய காயம் இயற்கையின் சாதாரண போக்கில் மரணமடைய செய்வதற்கு போதுமானது என்று அறிந்திருத்தல், அல்லது 4. தான் செய்யும் காரியம் அபாயகரமானது அதனால் மரணம் சம்பவிக்கும் அல்லது பெரும்பாலும் மரணத்தை விளைவிக்கக் கூடிய உடல் காயம் ஏற்படும் என்று அறிந்திருந்தும் அத்தகைய காரியத்தைப் புரிதல் அத்துடன் அந்த காரியம் செய்வதற்கு எந்தவிதமான அவசியமும் இல்லாதிருத்தல். உதாரணம்: a) பழனி என்பவனைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் ராமு துப்பாக்கியால் சுடுகிறான். பழனி மரணம் அடைகிறான். ராமு கொலைக்குற்றம் புரிந்தவனாகிறான். b) சண்முகத்துக்கு நோய்வாய்ப்பட்டு உடல் பலவீனமாகியுள்ள நிலையில் பலமான ஆதி அவனைச் சாகடித்துவிடும் என்று அறிந்துள்ள முருகேசன் அவனுக்கு உடம்பில் காயம் உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் ஓங்கியடிக்கிறான். அதன் விளைவாகச் சண்முகம் மரணம் அடைகிறான். உடல் நலமாக உள்ள மனிதனுக்கு அந்த ஆதி மரணத்தை உண்டாகாது. இருப்பினும் முருகேசன் கொலைக் குற்றம் புரிந்தவனாகிறான். முருகேசனுக்குச் சண்முகத்தின் உடல் நிலையைப்பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் காயம் உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் அவன் சண்முகத்தை அடித்திருந்தால் அவன் மீது கொலைக் குற்றம் சாராது. ஏனெனில் அந்த அடி மரணத்தை உண்டாகக்கூடிய அடி அல்ல. c) முனியன் முத்துவைக்க காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் கத்தியால் வெட்டுகிறான் அல்லது தடியால் அடிக்கிறான், அவன் உண்டாக்க நினைத்த காயம் சாதாரணமாக யாருக்கும் மரணத்தை உண்டாக்க கூடியது, காயம்பட்ட முத்து மரணம் அடைகிறான். முனியன் முத்துவைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் காரியம் செய்யவில்லை இருப்பினும் முனியன் மீது கொலைக் குற்றம் சாரும். d) ராமசாமி ஒரு காரணமும் இல்லாமல் ஒரு கூட்டத்தை நோக்கிச் சுடுகிறான். அதனால் கூட்டத்திலிருந்தவன் மரணம் அடைகிறான். யாரையும் கொல்ல வேண்டும் என்ற முன்யோசனையுடன் ராமசாமி கூட்டத்தைநோக்கிச் சுடவில்லை இருப்பினும் ராமசாமி மீது கொலைக் குற்றம் சாரும். மரணம் விளைவிக்கும் குற்றம் எப்பொழுது கொலைக்குற்றம் ஆகாது When Culpable Homicide is Not Murder விதிவிலக்கு: 1 திடீரென்று தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் நிதானத்தை இழந்துவிட்ட சூழ்நிலையில், தன்னைக் கோபப்படுத்தியவரைத் தாக்கி மரணம் அடைய செய்தாலும் அல்லது கோபத்தில் தவறுதலாக வேறொரு நபரின் மரணத்தை உண்டாகியிருந்தாலும் மரணத்தை விளைவிக்கும் குற்றம் கொலைக் குற்றம் ஆகாது. மேலே கூறப்பட்ட விதிவிலக்கு இங்கே சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். 1. அந்தக் கோப உணர்ச்சியை நாமே தேடிப் பெற்றதாக இருக்கக் கூடாது அதாவது நாம் வலிந்து ஒருவரைக் கொள்ளவேண்டும் அல்லது தாக்கவேண்டும் என்று வம்புக்குப் போனதால் விளைந்த சண்டையில் கோபம் ஏற்பட்டு நிதானம் இழந்ததாக இருக்கக் கூடாது. 2. ஒரு பொது ஊழியர் சட்டப்படி தம் கடமையை ஆற்றும்பொழுது அத்தகைய உணர்ச்சி எழுவதற்கு இடம் இல்லை. சட்டப்படி ஒரு செயல் நடைபெறுவதைக் கண்டு பொங்கியெழ முடியாது. 3. ஒருவன் தன்னுடைய தற்காப்பு உரிமையைச் சட்டப்படி பயன்படுத்துவதால், தன்னுடைய உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்தன என்ற வாதமும் ஒத்துக் கொள்ளப்படமாட்டாது. விளக்கம்: கொலைபுரியத்தூண்டும் அளவுக்கு, கோபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருந்ததா இல்லையா என்பதை, அந்தச் சூழ்நிலையை ஒட்டித் தான் முடிவு எடுக்க வேண்டும். உதாரணம்: 1. முருகனால் கோபம் ஊட்டப்பட்ட முனியன் அந்தக் கோபத்தை அடக்க முடியாததன் விளைவால் முருகனுடைய குழந்தையைக் கொன்று விடுகிறான். இங்கு முனியன் மீது கொலைக்குற்றம் சாரும். ஏனெனில் கோபத்தைத் தூண்டியவன் முருகனே அவனுடைய குழந்தை அல்ல. அத்துடன் முருகனுடைய குழந்தை, அந்தக் கோபத்தின் விளைவாகத் தவறுதலாகக் கொல்லப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. 2. ஒரு நீதிபதியின் முன் கொண்டுவரப்பட்ட ஒருவரைப் பார்த்து அந்த நீதிபதி "உன்னுடைய பேச்சை என்னால் நம்ப முடியாது, நீ பொய்ச்சாட்சி கூறுகிறாய், சத்தியத்திற்கு முரணாகப் பேசுகிறாய்" என்று கூறுகிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோபத்தில் நீதிபதியைக் கொன்று விடுகிறான். அந்த நபர் கொலைக்குற்றம் புரிந்தவனாகிறான். விதிவிலக்கு - 2 தன்னை அல்லது தனிஉடைய உடமையைக் காத்துக்கொள்ளும் பொருட்டுப் போராடும் நபர், சில சமயங்களில் சட்ட வரம்பை மீறிச் செயல்பட நேரிடலாம். அப்போது தன்னைத் தாக்குவோரைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தும் முன்யோசனையும் இன்றி பிறரை கொல்ல நேரிடலாம். அதனால் ஏற்பட்ட மரணத்திற்காக அந்த நபருக்கு மரணம் விளைவிக்கும் குற்றம்தான் சாரும், கொலைக்குற்றம் சாராது. உதாரணம்: ஒருவரை சாட்டையால் அடித்து துன்புறுத்துகின்றனர். சாட்டை அடியால் கொடுங்காயம் ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் அடிபட்டவர், தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகக் கைத்துப்பாக்கியால் சுடுகின்றார். அடித்தவர் மரணம் அடைகின்றார். சாட்டையடிக்குப் பிரதியாகத் துப்பாக்கியால் சுடுவது வரம்பு மீறிய செயலானாலும் சுட்டவர் அதைத் தவிர, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியே இல்லை என்று எண்ணி அப்படி சுட்டிருக்கிறார். எனவே சுட்டவர் மீது கொலைக்குற்றம் சாராது. மரணத்தை விளைவிக்கும் குற்றம் மட்டும்தான் சாரும். விதிவிலக்கு - 3 ஒரு பொதுஊழியர் அல்லது கடமையாற்றும். பொதுஊழியருக்கு உதவி செய்யும் ஒருவர் பொது நீதியை நிலை நாட்டும் வகையில் செயல்பட்டு அதனால் மரணம் சம்பவித்தால், அது கொலைக்குற்றம் ஆகாது. ஏனெனினில் பொது நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறாரேயன்றி யாரையாவது கொள்ளவேண்டும் என்ற கேட்ட எண்ணம் அவருக்கு இல்லை. எனவே அவர் மீது மரணத்தை விளைவிக்கும் குற்றம்தான் சாரும். விதிவிலக்கு - 4 முன்கூட்டியே திட்டமிடப்படாமல் திடீரென்று ஏற்படும் ஒரு சண்டையில் உணர்ச்சிகள் கொந்தளிப்பதால் மரணம் ஏற்படுகின்றது. அந்த சண்டையில் எதிரியின் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அநியாயமாகப் போராடவில்லை. கொடூரமாகவோ அல்லது அசாதாரணமாகவோ யாரும் காரியம்செய்யவில்லை. இந்த நிலையில் ஏற்பட்ட மரணம் கொலையாகாது. மரணத்தை விளைவித்த குற்றம்தான் சாரும். விளக்கம்: சண்டையை யார் தூண்டினார்கள் அல்லது யார் முதலில் வன்செயலுக்கு ஆயத்தமானார்கள் என்ற பிரச்சனை இங்கே முக்கியமல்ல. விதிவிலக்கு - 5 : பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தன்னிச்சையாக மரண அபாயத்தை வலிந்து ஏற்க முன்வந்தால் அல்லது மரணம் அடைந்தாள் அதனை கொலைக்குற்றமாகக் கூற முடியாது. மரணம் விளைவித்த குற்றமாகத்தான் கொள்ளமுடியும். உதாரணம்: தாஸ் என்பவரால் தூண்டப்பட்டு, குமார் என்ற பையன் தற்கொலை செய்து கொள்கிறான். குமாருக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகவில்லை. ஆகவே தன்னிச்சையாக ஒரு காரியத்தை அவனால் வலிந்து செய்யமுடியாது. எனவே தாஸ் மீது கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றம்சாரும்.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்