இந்திய தண்டனை சட்டம் பிரிவு-261 - 280

IPC-261\nஎவரேனும் மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரை பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ஏதாவதொரு எழுத்துரு அல்லது ஆவணத்திலுள்ள அத்தகைய முத்திரையைக் கொண்டிருக்கின்ற ஏதாவதொரு பொருளிலிருந்து அகற்றினால் அல்லது மறைத்தால், அல்லது ஏதாவதொரு எழுத்துரு அல்லது ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு முத்திரை, அத்தகைய எழுத்துரு அல்லது ஆவணத்திலிருந்து, ஒரு வேறுபட்ட எழுத்துருவில் அல்லது ஆவணத்தில் அத்தகைய முத்திரை பயன்படுத்தப்படலாம் என்பதன் பொருட்டு அகற்றினால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-262\nஎவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு முத்திரையை முன்னரே பயன்படுத்தப்பட்டுவிட்டது என அவருக்குத் தெரிந்தே மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே ஏதாவதொரு நோக்கத்திற்காக உள்நோக்கத்துடன் பயன்படுத்தினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-263\nஎவரேனும், மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையின்மீது, அது பயன்படுத்தப்பட்டு விட்டது என்பதை உணர்த்தும் நோக்கத்திற்காக இடப்பட்டுள்ள அல்லது பதிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு குறியை அழித்தால் அல்லது அகற்றினால், அத்தகைய குறி அழிக்கப்பட்ட அல்லது அகற்றப்பட்ட ஏதாவதொரு அத்தகைய முத்திரையை தெரிந்தே அவரின் உடமையில் வைத்திருந்தால் அல்லது விற்றால் அல்லது தீர்வு செய்தால் அல்லது பயன்படுத்தப்பட்டுவிட்டது என அவருக்கு தெரிந்த ஏதாவதொரு முத்திரையை விற்றால் அல்லது தீர்வு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-264\nஎவரேனும், பொய்யானது என அவருக்குத் தெரிந்த எடை தெரிவிப்பதற்கான ஏதாவதொரு உபகரணத்தை மோசடியாகப் பயன்படுத்தினால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-265\nஎவரேனும், ஏதாவதொரு பொய்யான எடையை அல்லது பொய்யான நீட்டல் அளவை அல்லது கொள்ளல் அளவை மோசடியாகப் பயன்படுத்தினால் அல்லது ஏதாவதொரு எடை, அல்லது நீட்டல் அளவை அல்லது கொள்ளல் அளவையை, அதனின் முந்தைய நிலையிலிருந்து ஒரு வேறுபட்ட எடை அல்லது அளவையாக மோசடியாகப் பயன்படுத்தினால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-266\nஎவரேனும், போலியானது என அவருக்குத் தெரிந்த எடை தெரிவிப்பதற்கான ஏதாவதொரு உபகரணம், அல்லது ஏதாவதொரு எடை அல்லது ஏதாவதொரு நீட்டல் அளவை அல்லது கொள்ளல் அளவையை, அது மோசடியாகப் பயன்படுத்தப்படலாமென்ற உள்நோக்கத்தில் உடமையில் வைத்திருந்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-267\nஎவரேனும், போலியானது என அவருக்குத் தெரிந்த எடை தெரிவிப்பதற்கான ஏதாவதொரு உபகரணத்தை, அல்லது ஏதாவதொரு எடையை, அல்லது ஏதாவதொரு நீட்டல் அளவை அல்லது கொள்ளல் அளவையை, அது உண்மையானது போன்று பயன்படுத்தும் பொருட்டு அல்லது அது உண்மையானதுபோன்று பயன்படுத்தப்படலாமென்று தெரிந்தே, தயாரித்தால், விற்றால் அல்லது தீர்வு செய்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-268\nபொது மக்களுக்கு அல்லது அருகில் தெரியும் சொத்தில் வசிக்கும் அல்லது இருக்கும் பொதுவான மக்களுக்கு, ஏதாவதொரு பொதுவான தீங்கு, அபாயம், அல்லது எரிச்சலை விளைவிக்கும் அல்லது ஏதாவதொரு பொது உரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ள நபர்களுக்கு தீங்கை, தடையை, அபாயத்தை அல்லது எரிச்சலை கட்டாயமாக விளைவிக்கக்கூடிய ஏதாவதொரு செயலைச் செய்யும் அல்லது சட்டவிரோத செய்வன செய்யாமை குற்றம் புரியும் ஒரு நபர், பொதுத் தொல்லை புரிந்த குற்றவாளியாகிறார். ஏதாவதொரு வசதி அல்லது அனுகூலத்தை விளைவிக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு சாதாரணத் தொல்லை மன்னிக்கப்படலாகாது. IPC-269\nஎவரேனும், உயிருக்கு ஆபத்தான ஏதாவதொரு நோயைத் தொற்றுதலால் அநேகமாக பரப்பும் என்றிருக்கிற மற்றும் அவருக்கு தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கிற சட்டத்துக்குப் புறம்பான அல்லது கவனக்குறைவான ஏதாவதொரு செயலைச் செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-270\nஎவரேனும், உயிருக்கு ஆபத்தான ஏதாவதொரு தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய மற்றும் பரப்பக்கூடுமென்று அவருக்குத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கிற தீய எண்ணத்திலான ஏதாவதொரு செயலைச் செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-271\nஎவரேனும், ஏதாவதொரு கலத்தை ஒரு தொற்றுத்தடை தனிமை நிலையில் வைத்திருப்பதற்காக அல்லது ஒரு தொற்றுத்தடை தனிமை நிலையில் உள்ள கலங்கள், கடற்கரையுடன் அல்லது பிற கலங்களுடன் தொடர்பு கொள்வதை ஒழுங்குபடுத்துவதற்காக அல்லது ஒரு தொற்றும் நோய் இருக்கின்ற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களுக்கும் இடையேயான தொடர்பை ஒழுங்குபடுத்துவதற்காக, அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவதொரு விதிக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-272\nஎவரேனும், உணவு அல்லது பானப்பொருளாக விற்கப்பட அல்லது அத்தகைய பொருளை உணவாக அல்லது பானமாக அநேகமாக விற்கப்படலாமென்று தெரிந்தே எண்ணப்பட்டு, ஏதாவதொரு உணவு அல்லது பானப் பொருளில் கலப்படம் செய்து, அத்தகைய உணவு அல்லது பானப்பொருளை கேடு விளைவிக்கும்படி செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும். IPC-273\nஎவரேனும் கேடு விளைவிக்கக்கூடிய நிலையில் ஆக்கப்பட்ட அல்லது அவ்வாறான கெட்டுப்போன ஏதாவதொரு பொருளை, அது கேடு விளைவிக்கக்கூடிய உணவு அல்லது பானமாக இருப்பதைத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது அந்த உணவு அல்லது பானமாக இருப்பதற்கு தகுதியில்லாத ஒரு நிலையிலிருக்கும் உணவு அல்லது பானத்தை விற்றால் அல்லது விற்பதற்கு அளித்தால் அல்லது விற்பனைக்கு வைத்திருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-274\nஎவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பில் அதன் வீரியத்தைக் குறைக்கும் அத்தகைய ஒரு முறையில், அல்லது அத்தகைய மருந்து அல்லது மருத்துவ தயாரிப்பின் செயல்பாட்டு முறையை மாற்றி, அதை கெடுதி விளைவிக்குமாறு உள்நோக்கத்துடன் செய்து அது விற்கப்பட அல்லது பயன்படுத்தப்பட, அல்லது அத்தகைய கலப்படம் செய்யப்படாததுபோல், அதனை ஏதாவதொரு மருந்து நோக்கத்திற்காக அநேகமாக விற்பனை செய்யப்பட அல்லது பயன்படுத்தலாமென்று தெரிந்தே, கலப்படம் செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-275\nஎவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பில், அதன் வீரியத்தைக் குறைக்கும் அத்தகைய ஒரு முறையில், அதனின் செயல்பாட்டு முறையை மாற்றி, அல்லது அதை கெடுதி விளைவிக்குமாறு செய்து கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தே அதை விற்றால் அல்லது அளித்தால் அல்லது அதை விற்பனைக்காக வைத்தால் அல்லது கலப்படம் செய்யப்படாததுபோல் மருந்து நோக்கங்களுக்காக ஏதாவதொரு மருந்தகத்திலிருந்து அதை அளித்தால், அல்லது அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றது என்று தெரியாமல் யாரேனும் ஒரு நபரால் அது மருந்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-276\nஎவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பை, அது வேறுபட்ட மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பைப் போல் தெரிந்தே விற்றால் அல்லது அளித்தால் அல்லது விற்பனைக்கு வைத்தால் அல்லது ஒரு மருந்தகத்திலிருந்து மருந்து நோக்கங்களுக்காக கொடுத்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-277\nஎவரேனும், ஏதாவதொரு பொது நீருற்றின் அல்லது நீர்த்தேக்கத்தின் தண்ணீரை, தன்னிச்சையாகக் களங்கப்படுத்தி அல்லது மாசுபடுத்தி, அதன்மூலம் அது எதற்காக சாதாரணமாகப் பயன்படுத்தப்படுமோ, அந்நோக்கத்திற்கான தகுதியைக் குறைக்கும் விதமாகச் செய்தால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-278\nஎவரேனும், சாதாரணமாக குடியிருக்கும் அல்லது அருகில் வணிகத்தைச் செய்யும் அல்லது ஒரு பொதுவழியாகக் கடந்து செல்லும் ஏதாவதொரு இடத்தில் அங்குள்ள நபர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமாறு சுற்றுச்சூழலை தன்னிச்சையாக மாசுபடுத்தினால், ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப் படவேண்டும். IPC-279\nமனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓடுவது சவாரி செய்வதும் குற்றமாகும், இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். ஒரு பொதுவழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் ஓட்டுதல் அல்லது செலுத்துதல் எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம் அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் ஏதாவதொரு வாகனத்தை ஏதாவதொரு பொது வழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஓட்டினால் அல்லது செலுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். IPC-280\nஎவரேனும்.மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம், அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஏதாவதொரு நீர்வழிக்கலத்தை செலுத்தினால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Popular posts from this blog

Privacy Policy

Tamil BNS Privacy Policy

இரண்டு முட்டாள் ஆடுகள்